Header Ads



மட்டு. கம்பஸில் தங்கவைக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு, பணத்தினை மற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை இலங்கை வங்கியில் மட்டு கம்பஸ், கந்தாக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டு பணத்தினை இலங்கை ரூபாவில் மாற்றுவதற்க்கான நடவடிக்கை தொடர்பாக  தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் வங்கியின் முன்பாக கூடி நின்று இன்று புதன் கிழமை 11 கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் செயற்பாட்டினால் வங்கி நடவடிக்கைகளில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

 கொரோனா வைரஸ் தொற்றுநோய்  அச்சுறுத்தல் தொடரும் நிலையில் நேற்று இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டு கம்பஸ் மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது தேவை கருதி வங்கியில் தமது பணங்களை மாற்றுவதற்கு எடுத்த முயற்சி தொடர்பான தகவல் அறிந்தே இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கியின் முன்பாக கூடிய இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்பினை தெரிவித்தனர்.

 வெளிநாட்டு பணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம் அவை தமது பிரதேசங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அச்சம் தெரிவித்தே தமது எதிர்பினை வெளிப்படுத்தினர்.

வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து அவ்வாறான தகவல் பொய்யானது என்றும்  குறித்த செயற்பாடு வங்கியில் இடம்பெறாது என தெரிவித்தனர். பொலிசாரின் கருத்தினை கேட்டறிந்து போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.


1 comment:

  1. பொதுமக்களின் கோரிக்ைக நியாயமானது. பொலிஸுக்கு விடயங்கள் தெரியாமைக்கு மக்கள் பலியல்ல. வைரஸ் கிருமி பரவும் என்ற பயத்தில் சீனா,வுஹான் மாகாணத்தில் புழக்கத்தில் இருந்த பணம் அனைத்தும் அழிக்கப்பட்டது.

    ReplyDelete

Powered by Blogger.