Header Ads



மைத்திரிக்கு, சந்திரிக்கா அனுப்பிய முக்கிய கடிதம்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவு மற்றும் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதிகளை அனாதைகளாக மாற்றியமை சம்பந்தமாக” என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 12 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி உள்ளார்.

நாங்கள் கட்டியெழுப்ப முயற்சித்த ஆட்சியின் ஊடாக தமது மோசடியான, சுயநலமான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பதால், சில போலி அரசியல் தலைவர்கள், அந்த உன்னதமான திட்டத்தை அழித்து, 2015 நல்லாட்சி நோக்கங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் தன்னை போன்றவர்களை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சித்து வருவதாகவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ அரச அதிகாரத்தை தமது வருமான வழியாக மாற்றிக்கொண்டுள்ள தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிறிய மனிதர்கள் மாத்திரமே, எனது கொள்கை, எந்த மாற்றமும் இல்லாத நேர்மை, நேரடியான, ஒழுக்கத்தின் அடிப்படையை கொண்ட எனது ஆத்ம சக்திக்கு அஞ்சுகின்றனர்.

எனது அரசியல் திடம் மற்றும் அனேக கஷ்டங்களை அனுபவித்து நான் வெற்றிக்கொண்ட மக்களின் நம்பிக்கையை அழிக்க முடியும் என நீங்களும், உங்களுடன் இருப்பவர்களும் நம்புவார்கள் என்றால், அது வெறும் கனவு மாத்திரமே.

பூங்காவுக்கு கீழ் உள்ள சகல ரோஜாப் பூக்களை அழிக்க முடிந்த போதிலும் பூப்பூக்கும் வசந்தகாலம் உதயமாவதை தடுக்க முடியாது” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.