March 24, 2020

ஊரடங்குச் சட்டம், விடுமுறை பயங்கரமாக போவதைக் கண்டு நெஞ்சம் பதைத்தது...


- Inamullah Masihudeen -

எண்ட ரப்பே யாரிடம் போய்ச் சொல்ல..!

இன்று காலை சுபஹு தொழுதுவிட்டு மருதானை காகில்ஸ் சுப்பர் மார்கட்டிற்கு மளிகை சாமான்கள வாங்கவென சென்றேன், ஏற்கனவே சுமார் 30 பேரளவில் வரிசையில் காத்திருந்தனர், போலீசார் பாதுகாப்பு படையினரும் கடமையில் இருந்தனர்.

சுமார் அரை மணித்தியாலம் கழித்து பின்னே திரும்பி பார்த்தேன் கண்ணுக்கெட்டும் தூரத்திற்கு வரிசை நீண்டு சென்று வளைவில் மறைந்தது.

ஏழு மணியளவில் உள்ளே செல்ல அனுமத்திதனர், உள்ளே சென்ற பலரும் விரைவாக வெளியே சென்று கொண்டிருந்தனர்.

கவலைக்குரிய விடயம் யாதெனில் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களான மாவு தேங்காய், பருப்பு , மரக்கறி வகைகள், டின் மீன், முட்டை, சிவப்பு பச்சை அரிசி, பெரிய வெங்காயம் எதுவுமே இருக்கவில்லை, மீன் இருக்கவில்லை, கோழி இறைச்சி சிறிய தொகை இருந்தது, பாண் மற்றும் எந்தவொரு பேக்கரி சாமான்களும் இருக்கவில்லை.

ஏன் போதிய அளவில் பொருட்கள் இல்லை என்று முகாமையாளரிடம் கேட்டபோது, பொருட்கள் வரவில்லை என்றார், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் இருக்கும் மக்களை எண்ணி வருந்தினேன், ஏழை மக்கள் தேடி வரும் மாவு தேங்காய், பருப்பு , முட்டை, மரக்கறி வகைகள், டின் மீன், சிவப்பு பச்சை அரிசி போன்றவையே அங்கு இருக்க வில்லை.

நிறைய மக்கள் வந்த வேகத்தில் கிளம்பி ஓடுவதை அவதானிக்க முடிந்தது.

மாளிகாவத்தை பக்கமாக இறைச்சி மீன் முட்டை வகைகள் வாங்கலாமே என்று வந்தேன் அங்கெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒவ்வொரு கடையிலும் வரிசைகள், நிச்சயமாக பாதி வரிசை வரும் பொழுதே பொருட்கள் முடிந்து போவதை அறியாத பாமர மக்களும் ஏழைகளும்!

யாரை குறை சொல்லுவது எஞ்சிய பொருட்களை பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பல சில்லறைக் கடைகளில் பாதை ஓரங்களில் தேடிக் கொண்டு நானும் ஒருவாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்..!

அரசும் தனியார் துறையும் இவ்விக்கட்டான நிலையில் மக்களை சோதிப்பதாகவே உணர்ந்தேன், கார்கில்ஸ் வரிசையில் இருந்த சில அறிமுகமான முகங்களை மீண்டும் மருதானை பொதுசந்தை பகுதியில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைக் கண்டேன்!

கொழும்பு போரக்கொட்டை கோட்டை பகுதிகளில் மக்கள் வெள்ளம், இந்த ஊரடங்கு மற்றும் விடுமுறைகளின் நோக்கம் இவ்வாறு பயங்கரமாக பயனற்றதாக போவதைக் கண்டு நெஞ்சம் பதைத்தது.

அரசும் தனியார் துறையும் சில்லறை மொத்த வியாபாரியாக்ளும் உடனடியாக நடமாடும் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் !

எனது சேவையையும் தேவைப்படின் இனாமாக அரசிற்கு வழங்க தயாராக இருக்கிறேன், முஸ்லிம் சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் தயாராக இருக்கின்றன.

பாவம் அப்பாவி மக்கள்..!

3 கருத்துரைகள்:

Yes this is the real, gov...doesn't know how to handle the situation and provide the needs

இன்றைய சன நெரிசல் மூலம் தொற்று ஏற் பட்டிருக்கலாம். அப்படியாயின் இன்றில் இருந்து மீண்டும் 14 நா‌ட்களு‌க்கு ஊர் அடங்கு சட்டத்தை அமலாக்கினால் தான் வெற்றி அடையலாம். எனவே ஏற்கெனவே போட்ட ஊர் அடங்கு வீண் ஆகிவிட்டது. அரசின் பிழையான திட்டமிடல் இது. mobile திட்டத்தை முன்னரே அமுல்படுத்தி இருக்க வேண்டும்.

Nalla,vediyam,aggala,madri,allihalukku,slli,illa,yar,udvi,sivarhal

Post a comment