Header Ads



அம்பாறையில் அதிகளவான மீன்கள் பிடிப்பு, குறைந்த விலையில் விற்பனை


- பாறுக் ஷிஹான் -

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்   அம்பாறை மாவட்ட  கடற்றொழில் மீனவர்கள்   அதிகளவான மீன்களை பிடித்துள்ளனர். இவ்வாறு அதிகளவான மீன்களை திங்கட்கிழமை(23) காலை முதல் பிடித்து வருவதுடன் குறைந்த விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக   மருதமுனை    அட்டாளைச்சேனை  நிந்தவூர் பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு அதிகளவு மீன்களை  மீனவர்கள் பிடிக்கின்றனர்.

 இதில் ஒரு கிலோ விளைமீன் 500 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 500 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 600 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 900 ரூபாயாகவும் வளையா மீன் 650 ரூபா  ஆகவும்  நண்டு ஒரு கிலோ 550 ரூபா  ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில்  வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை  மீன் வகைகளின் விலைகளும்  காணப்படுகின்றன.

கடந்த மூன்று தினங்களாக  வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன்    பெரும் நஸ்டத்திலேயே கடந்த 3 நாட்களாக  வாழ்க்கை செலவுகளை நடார்த்தி வருவதாகவும்  ல் வலை இழுக்க  யாரும் வருவதில்லை எனவும்  இதனால்  வாழ்வாதாரம் பெரும் பாதிப்புறுவதாக    கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர்.

3 comments:

  1. இது பிழையான விலைகள் கல்முனையில் வளயா கிலோ 250/=
    சூடமீன்கிலோ 500/=

    ReplyDelete
  2. வாழைச்சேனையில் பலயா மீன் கிலோ 200/-6

    ReplyDelete
  3. இந்த மீன்விலைகள் மலிவில்லையே. வழக்கமான விலைகள்.

    ReplyDelete

Powered by Blogger.