March 28, 2020

பிறர் துயரில் மகிழாதிருப்போம்,, அருள்மிக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்

அமெரிக்க வல்லரசு இன்று கொரோனா தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் வகிப்பதையிட்டு ஒரு சிலர் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதும் அத்தகைய நெருக்கடி நிலையை இஸ்லாமிய சமயத்தோடு தொடர்புபடுத்திப் பதிவிடுவதும், அதை இன்னும் சிலர் வேகவேகமாகப் பகிர்வதும் ஆழ்ந்த மன வருத்தத்தைத் தரும் அரைவேக்காட்டுத்தனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் உணர வேண்டும். அன்பையும் மன்னிப்பையும் மகத்துவப்படுத்தும் இஸ்லாத்தின் செய்தியைச் சரியாக விளங்கிக் கொள்ளாத மடத்தனத்தின் வெளிப்பாடே இவையெல்லாம்.

அமெரிக்க அதிகார தரப்பினால் எத்தனையோ நாடுகள் சூறையாடப்பட்டு உள்ளமையும், அந்நாடுகளின் மக்கள் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டு உள்ளமையும் உண்மைதான். அதிகார வெறி கொண்ட எந்த ஒரு வல்லாதிக்கச் சக்தியும் அவ்விதம் செயல்பட்டு உலகின் பெருவாரியான மக்களின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் என்பதும் நிதர்சனம் தான்.

ஆனால், இத்தகைய ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த இக்கட்டான நிலையைப் பற்றி மகிழ்ச்சி அடைவதானது, மோசமான ஓர் உளவியல் பின்னடைவு நிலையாகும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

காரணம், அமெரிக்க மக்களும் அமெரிக்க அதிகாரத் தரப்பும் ஒன்றல்ல என்ற தெளிவு நமக்கு அவசியம். அமெரிக்க மக்கள் எனும்போது அவர்களுள்,

# இன்றைய ட்ரம்ப் அரசின் சார்பில் பாடுபட்டுக் கருத்துருவாக்கம் செய்து ட்ரம்ப்பை அதிகாரத் தரப்பாகப் பதவியில் அமர்த்தியவர்கள்

# ட்ரம்பின் தரப்பினரை எதிர்த்து வாக்களித்தவர்கள்.

# ட்ரம்ப் அரசினை மனதளவில் விரும்பாத போதிலும் அதனை எதிர்க்க சக்தியற்ற சாதாரணர்கள்.

# பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்கள்.

# அமெரிக்க பழங்குடியினர், கருப்பினத்தவர்

இப்படியிப்படி எல்லாத் தரப்பினரும் - முஸ்லிம்கள் உட்பட- அமெரிக்க மக்கள் தொகையில் அடங்குவார்கள்.

ஒரு கொடிய தொற்று நோய்ப் பரவல் என வரும்போது அது ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, பாரம்பரியம் பார்த்து, பாவ புண்ணியம் பார்த்தெல்லாம் தாக்குவது இல்லை என்பது மிக எளிய உண்மை. அதன் மூலம் எல்லாத் தரப்பினருமே மிக மோசமாகப் பாதிப்படைவர். இதுவே யதார்த்தம்.
அந்த வகையில், அமெரிக்க மக்களின் இந்தத் துன்பத்தையிட்டு சந்தோஷப்படுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. அது மிகப்பெரும் அநீதியும் வன்மமும் ஆகும். பண்பட்ட நாகரிக விழுமியங்களைப் பின்பற்றும் மனிதர்கள் என்ற வகையில் சக மனிதர்களின் துயரமும் அவலமும் நெருக்கடி நிலையும் ஒருபோதும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்த முடியாது.

அப்படிப் பிறர் துயரம் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமாக இருந்தால், நம்முடைய உள்ளத்தில் மிக மோசமான மனநோய் பீடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய மோசமான சாடிஸ மனநிலையில் இருந்து மீள்வதற்கு ஒரு சிறந்த மனநலச் சீராக்கமும் வழிகாட்டலும் தேவையாக இருக்கின்றன என்று அர்த்தம்.

அத்தகைய இழி மனிதர்களாக இருப்பதை விட்டும் அருள் மிக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோமாக! முழு உலக மக்களின் சுபீட்சத்துக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மனமுருகிப் பிரார்த்திப்போமாக!

Abdul Haq Lareena

2 கருத்துரைகள்:

he order was issued by the King of Kings (Allah)

Today, the commander of the most powerful army in the world, the American Defense Minister ... is imprisoned by Allah’s command .. !!

Today, all the Las Vegas hotels have closed the largest gambling clubs in the world. By the command of Allah

Today, the streets of prostitution in Amsterdam are closed, whose income exceeds $ 10 billion a year. By the command of Allah

Today, all countries of the world have closed down nudist clubs, gays, nightclubs, bars and many restaurants .. !! By the command of Allah

Today the largest number of planes during history on the ground knocks down .. !! By the command of Allah

Today, Trump announced today that the interest rate would be reduced to zero, that is, the abolition of interest. By the command of Allah

Today Putin is discussing with Bashart to stop the war in Syria. By the command of Allah

Today the whole world wears the hijab and is prospecting for fear of a virus that is not visible to the naked eye. By the command of Allah

Today, the stock exchange lost two weeks, 16 trillion dollars. !! By the command of Allah

The whole world is searching for deliverance .. !!

Where are the people who thought they were capable of it .. Where are the titans ?! Arrogant and atheists who deny the existence of Allah. Where are the darkness, criminals and hypocrites?
Their voices have dimmed.

To whom does the king today belong to the One Almighty Allah who said in his book:
"If he grew up, we would send them a sign from heaven, and their necks would be kept subject to it."

Allah is Rabul Aalameen

அவர்களது விடுதலைக்காகவும் படிப்பினை பெறுவதற்கஆகவும் பிரார்த்திப்போம்

Post a comment