Header Ads



முஸ்லிம் கட்சிகள் தேர்தலை, எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்றம் நேற்று முன்­தினம் 2 ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் கலைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அர­சி­ய­ல­மைப்பில் 70 ஆவது பிரிவில் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­காரம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் இல.1 பாரா­ளு­மன்ற வாக்­கெ­டுப்புச் சட்­டத்தின் விதி­க­ளுக்­க­மை­யவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு அரச அச்­ச­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்றத் துக்­கான தேர்தல் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடை­பெறவுள்­ளது. அத்­தோடு வேட்­பு­மனுத் தாக்­கல் எதிர்­வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி பகல் 12 மணி­வரை இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­துடன் ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது சபை அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக பாரா­ளு­மன்­றத்தை நான்­கரை வரு­டத்தின் பின்பே ஜனா­தி­ப­தி­யினால் கலைக்­க­மு­டியும். கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெற்­றது. அந்த வகை­யிலே நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுடன் நான்­கரை வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன.

இலங்கை பாரா­ளு­மன்­றத்­திற்கு 225 உறுப்­பி­னர்கள் வாக்­கா­ளர்­க­ளினால் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். 196 உறுப்­பி­னர்கள் மாவட்ட ரீதியில் வாக்­கா­ளர்­க­ளினால் நேர­டி­யா­கவும் 29 உறுப்­பி­னர்கள் தேசி­யப்­பட்­டிய லூடா­கவும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேசிய ரீதியில் பெறு­கின்ற வாக்­கு­க­ளைக்­கொண்டு கட்சிகளின் தேசிய பட்­டியல் உறுப்­பி­னர்­ எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­படும். தேர்­தலில் வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு கட்சி அல்­லது கூட்­டணி 113 ஆச­னங்­களைப் பெற்­றா­க­வேண்டும்.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் எட்­டா­வது பாரா­ளு­மன்றம் 5 வருட பத­விக்­கா­லத்தைக் கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றை வெளி­யிட்டார். எனினும் அதற்­கெ­தி­ராக உயர்­நீ­தி­மன்றில் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. பத­விக்­காலம் 4 ½ வரு­டங்கள் பூர்த்­தி­யாக முன்பு பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­க­மு­டி­யாது என்றே மனுத்­தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் உயர்­நீ­தி­மன்றம் முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி சட்­ட­வி­ரோ­த­மா­னது எனத் தீர்ப்­ப­ளித்­தது. இத­ன­டிப்­ப­டை­யிலே பாரா­ளு­மன்றம் நான்­கரை வரு­டத்தின் பின்பு கலைக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சியல் கள­நி­லைமை சூடு­பி­டித்­துள்­ளது. அர­சியல் கட்­சிகள் சுறு­சு­றுப்­ப­டைந்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­படும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யொன்று ‘ஐக்­கிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் உத­ய­மா­கி­யுள்­ளது.

10 அர­சியல் கட்­சிகள், 18 தொழிற்­சங்­கங்கள், 20 சிவில் அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து இக்­கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை நேற்று முன்­தினம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இக்­கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் இணைந்து கொண்­டுள்­ளன. இக்­கூட்­ட­ணியின் சின்னம் இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்­வரும் தேர்­தலில் யானைச் சின்­னத்தில் கள­மி­றங்­க­வுள்­ள­தாக அக்­கட்­சியின் உப­த­லைவர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­படும் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­காக வேட்­பு­மனு சபை­யொன்றும் நிறு­வப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்டு இரு அணி­க­ளாகக் கள­மி­றங்­கினால் ‘ஐக்­கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியில் இணைந்து அக்கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பிளவுபட்டு வாக்களிக்கும் நிலை உருவாகும். இவ்வாறான நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஆராயலாம் அல்லது கூட்டணியொன்றினை அமைத்துப் போட்டியிடலாம். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.-Vidivelli

No comments

Powered by Blogger.