Header Ads



ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி - காட்டில் தஞ்சம் -

பண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கை ஹோட்டல்களில் தங்குவதற்கு, உரிமையாளர்கள் அனுமதி வழங்குவதனை புறக்கணித்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாட்டு தம்பதி ஒன்றுக்கு தங்க இடம் இல்லாமல் போயுள்ளது. இதனால் காட்டிற்குள் சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து வசித்து வருகின்றனர்.

பின்னர் பொலிஸார் அவர்கள் தங்குவதற்கு பொருத்தமான இடம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்காண்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. This is not humanity .

    ReplyDelete
  2. Animals will do like this...anyway, why they didn't go to the police station at that time?

    ReplyDelete
  3. Tourist Board should take immediate action to help these tourists.

    ReplyDelete
  4. "ஏணியால் உயர ஏறிவிட்டு இனி இந்த ஏணிவேண்டாம் என்று புறக்கணித்தான்"

    நன்றி கெட்ட மனிதன்

    கெட்டவனும் நல்லவனும் மனிதர்களில் உள்ளவர்கள்!

    இந்த விடுதி சொந்தக்காரன் எந்தளவு கெட்டவன் என்று வர்ணிக்கமுடியாமல் இருக்கின்றது!

    ReplyDelete
  5. It’s so sad and bad behavior from the hotel management. First of all they have to respect the humanity.

    ReplyDelete

Powered by Blogger.