Header Ads



சடலங்களை புதைக்க இடமில்லை, விளையாட்டு அரங்கத்தை பிணவறையாக மாற்ற முயற்சி


ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இறப்புவீதம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில்,  பிரபல விளையாட்டு அரங்கம் ஒன்றை பிணவறையாக மாற்ற அதிகாரிகள் கட்டாயத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாட்ரிட் நகரில் அமைந்துள்ள Palacio de Hielo ice rink என்ற விளையாட்டு அரங்கமே அதிகாரிகளால் தற்போது பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஸ்பெயின்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி 489 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,800 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 4,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மொத்தம் 39,676 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே பெருவாரியான காப்பகங்களில் இறந்த அல்லது இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை கைவிடப்பட்ட நிலையில் ராணுவம் கண்டறிந்ததை அடுத்தே,

பிரபலமான விளையாட்டு அரங்கத்தை பிணவறையாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் குறித்த விளையாட்டு அரங்க நிர்வாகிகள் இந்த முடிவுக்கு முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த வாரம் Monte Hermoso என்ற காப்பகத்தில் கைவிடப்பட்ட நிலையில் பல சடலங்களை கண்டறிந்தனர்.

தொடர்ந்து Alcoy பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் இருந்து 21 சடலங்களை சுகாதார ஊழியர்கள் குழு கண்டறிந்தது.

மாட்ரிட் நகரில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் இருந்தும் 17 சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் மீடகப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் காப்பக ஊழியர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டதாலையே கவனிக்க எவருமின்றி பல காப்பகங்களில் முதியவர்கள் கொரோனாவால் இறக்க நேரிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும், முதியவர்களை காக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.