Header Ads



மதுமாதவவை நான் மறைத்து வைத்திருந்தேன், சூட்சுமமாக செயற்பட்டால் ரவி மறைந்திருக்க முடியும்

ரவி கருணாநாயக்க நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் குற்றவாளியாக அறிவிக்கப்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று (09) கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ரவி கருணாநாயக்க தற்போது இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. 

சமீபத்தில் மினுவங்கொடையில் இடம்பெற்ற இனவாத கலவரத்தின் போது அதன் பிரதான சந்தேகநபராக தமது கட்சியின் பிரதித் தலைவர் மது மாதவ அரவிந்தவை குறிப்பிட்டு அவரை கைது செய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவை பெறும் வரையில் மதுமாதவ அரவிந்தவை ஒரு மாதக்காலம் தான் மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

சூட்சுமமாக செயற்பட்டால் மறைந்திருக்க முடியும் எனினும் எப்போதும் அதனை செய்ய முடியாது என அவர் இதன்போது தெரிவித்தார். 

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் ரவி கருணாநாயக்க நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகுவதாக கம்மன்பில குறிப்பிட்டார். 

அதன் காரணமாக, மறைந்திருப்பதை விட நீதிமன்றில் சரணடைவது சிறந்த செயலாகும் என தெரிவித்த கம்மன்பில, பல நாட்கள் மறைந்திருக்க முடியாது எனவும் தலைவர் ஒருவர் என்ற வகையில் நீதிமன்றில் சரணடைந்து தண்டனையை பெறுவது கௌரவமானது என தெரிவித்திருந்தார். 

2 comments:

  1. திகனயில் முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து,முஸ்லிம்களை அநியாயமாகக் கொலை செய்து இனக்கலவரத்தைத்தூண்டி, இனங்களுக்கிடையே நிலவிய ஐக்கியம் ஒற்றுமையைச் சீர்குலைத்த கொலைகார இனவெறியனை மறைத்து வைத்தது மற்றொரு இனவாதி என்பது அவனுடைய வார்த்தைகளால் இந்த செய்தியில் தான் பொதுமக்களுக்கு நன்றாகக் தெரிகிறது.

    ReplyDelete
  2. Gamanpilla should be arrested for hiding a wanted criminal.

    ReplyDelete

Powered by Blogger.