Header Ads



ஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன?

உயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்­றுள்­ளது.  

இந்நிலையில் குறித்த நபர் திரும்பி வந்­ததால் அடக்கம் செய்­யப்­பட்­டவர் யார் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு அடக்கம் செய்­யப்­பட்­ட­தாக கரு­தப்­படும் ஜனா­ஸாவை அகழ்ந்­தெ­டுக்கும் பணிகள் நேற்று புதன்­கி­ழமை 11 காலை புத்­தளம் வெட்­டுக்­குளம் மைய வாடியில் இடம்­பெற்­றது.

புத்­தளம் மாவட்ட நீதிவான், புத்­தளம் மற்றும் கற்­பிட்டி திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ.எம். ஹிஷாம், புத்­தளம் பொலிஸார் மற்றும் தள வைத்­தி­ய­சாலை அதி­கா­ரிகள் முன்­னி­லையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்­பெற்­றன. 

இதன்­போது குறித்த பிர­தே­சத்­துக்குள் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எவரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்ட சடலம் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் மற்றும் கல்­பிட்டி திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ.எம். ஹிஷாம் இது தொடர்­பாக தெரி­விக்­கையில்,

கடந்த ஜன­வரி மாதம் 28 ஆம் திகதி புத்­த­ளத்தில் உருக்­கு­லைந்த நிலையில் காணப்­பட்ட சடலம் ஒன்றை அவ­ரது குடும்­பத்­தி­ன­ராக கரு­தப்­ப­டு­ப­வர்கள் இனங்­காட்­டி­ய­தை­ய­டுத்து ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி சடலம் புத்­தளம் வெட்­டுக்­குளம் மைய வாடியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஆனால், நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­தாக கரு­தப்­பட்­டவர் மறுநாள் உயி­ருடன் காணப்­பட்­ட­தை­ய­டுத்து நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டவர் யார் என்­பதை இனங்­காணும் பொருட்டே குறித்த சடலம் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.