Header Ads



இத்தாலி, தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி மற்றும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுள் பெரும்பாலானோர் நாடு திரும்பி வருகின்றனர்.

இதற்கமைய, குறித்த நாடுகளில் இருந்து கடந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரத்து 800 பேர் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடு திரும்பியள்ளவர்களுள் பெரும்பாலானோர் இத்தாலியில் இருந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோன வைரஸ் வேகமாக பரவிவரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விடுமுறையை பெற்றுக்கொள்ளக்கூடிய பெருமளவான தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவில்; கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 5 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் இதுவரையில் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 168 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவில் 80 ஆயிரத்து 152 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 945 அதிகரித்துளளது.

இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்த மீள்வதற்காக உலக வங்கி 12 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.