Header Ads



சீன சரணங் கட்சாமி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் நடவடிக்கையில் மக்கள் விரக்தியுற்றுவருகின்றனர். அதனால் ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்றுபட்டு செயற்பட்டால் மீண்டும் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்குவந்து நூறுநாட்களில் மக்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்துவருகின்றது. அரசாங்கம் சீன சரணங் கட்சாமி என்ற கொள்கையையே பின்பற்றி சென்றது. ஆனால் இன்று சீனா கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பதால்,  அரசாங்கத்துக்கு நிதி உதவிகளை பெறுவதற்கு  வேறு வழிதெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. சீனாவை மாத்திரமே நம்பி அரசாங்கம் செயற்பட்டுவந்தது. 

அத்துடன் நாட்டை கொண்டுசெல்ல அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது. நிதி வழங்குவதற்கு வேறுநாடுகள் இல்லை. சீனா எதிர்கொண்டுள்ள பிரச்சினை காரணமாக எமது நாட்டின் சுற்றுலாத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இன்று -03- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

2 comments:

  1. உயர்தர மாணவர்களுக்கு லெப்டோேப், பாடசாலை காப்புறுதி என கல்வி அமைச்சராக இருந்து கொண்டு கொள்ளையடித்த,கமிசன் ஏஜென்ட் வேலை செய்த அகில விராஜ் இல்லாத யூன்பியைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete
  2. If you believe in unity then why don’t you guys unite? What’s the point just making speeches like this?

    ReplyDelete

Powered by Blogger.