Header Ads



"குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, கை குலுக்கவோ வேண்டாம்"


பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட்டு விடும்.

இன்று பல பல புதிய நோய்கள் உருவாகியுள்ள நிலையில், குழந்தைகளை இதிலிருந்து பாதுகாப்பது அவசியமானதாகும்.

அந்தவகையில் கொரோனா போன்ற வைரஸ்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனாவிற்கும் வித்தியாசத்தை உடனே அறிவது சற்று கடினம். அதே சமயம் குழந்தை ஒரே நாளில் சோர்வாகி விடுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

உடல் தசைகளில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்ட குழந்தை வசித்த இடத்தை தூய்மைப்படுத்துவது அவசியம்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் முதலில் தனிமைப்படுத்துவது கட்டாயம். குறைந்தது 14 முதல் 28 நாட்கள் வரை தனிமையில் வைக்க வேண்டும்.

குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுத்தமான நீரில் தயாரித்த ஐஸ்கிரீமை எப்போதாவது பயன்படுத்தலாம்.

எதிரே இருப்பவரின் முகத்தை நோக்கி இருமக் கூடாது. காய்ச்சல் இருந்தால் தலையை கீழே நோக்கி வைத்து இரும வேண்டும்.இருமல், தும்மல் உள்ளோர் அமர்ந்து சென்ற இடத்தை சுத்தம் செய்வது அவசியம்.

அடிக்கடி கிருமி நாசியினை பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பும் பின்பும் கை கழுவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

கழிப்பறையை பயன்டுத்துவதற்கு முன்பும் பின்பும் கைககளை கழுவ வேண்டும்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் குழந்தைகள், பெற்றோர் முகக்கவசம் அணிய வேண்டும்.

முக்கியமாக குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, கை குலுக்கவோ கூடாது.

No comments

Powered by Blogger.