Header Ads



சுவிஸ் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்


தெற்கு சுவிஸ் மாகாணமான டிசினோவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி எல்லையிலுள்ள சுவிஸ் மாகாணமான டிசினோவில் தியேட்டர்கள், பனிச்சறுக்கு ரிசார்ட்கள், உடற்பயிற்சி மையங்கள், இரவு விடுதிகள் மற்றும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

நாளொன்றிற்கு 68,000 பணியாளர்கள் இத்தாலியிலிருந்து டிசினோவுற்குள் நுழையும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவுவதை தடுக்க 12 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதையும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 பேருக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று சுவிஸ் அரசு இத்தாலியுடனான ஒன்பது எல்லை கடக்கும் பகுதிகளை மூடியுள்ளது. இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் வரும் ஏராளம் பணியாளர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மேற்பார்வையிடுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இத்தாலி எல்லையை மொத்தமாக மூட அரசு மறுத்துவிட்டது. இதுபோக, சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், Stuttgart, Nuremburg மற்றும் Bordeaux ஆகிய இடங்கள், மற்றும் இத்தாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ஏப்ரல் துவக்கம் வரை ரத்துசெய்துள்ளது.

மேலும், வெனிஸ் மற்றும் மிலனுக்கு செல்லும் ரயில் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.