Header Ads



ஜனாதிபதி இனவாதி அல்ல என்பதை, முஸ்லிம் மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை இனவாதி எனக் கூறி மக்களை ஏமாற்றி அடிப்படைவாத கட்சிகளை கைவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்குமாறு ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முடிந்தால், வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி வெற்றி பெற்று காட்டுங்கள் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க ஹக்கீம் உள்ளிட்டோர் முயற்சித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து போட்டியிட தயாராகி வருகின்றன. ஹக்கீம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

ஹக்கீம் அந்த கூட்டணியில் இணைந்துள்ளதன் மூலம் அடிப்படைவாதிகள் எந்த பக்கத்தில் இருக்கின்றனர் என்பது மக்களுக்கு புரிந்துள்ளது என்பதே எமக்கான சாதகம்.

ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம், கோட்டாபய ராஜபக்ச இனவாதி எனக் கூறி முஸ்லிம் மக்களை ஏமாற்றினார். ஜனாதிபதி அனைத்து மக்களுக்கும் நியாயமான வகையில் நடந்துக்கொள்வதால், அவர் இனவாதி அல்ல என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவும் சமமாக நடத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அடிப்படைவாத இனவாத அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து விலகி, 1948 ஆம் ஆண்டு அனைத்து இனங்களும் இணைந்து பெற்றுக்கொண்ட சுதந்திரம் மற்றும் அதற்கு இணையான பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.