Header Ads



நாங்கள் போட்ட பிச்சையால்தான், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது - பேராசியர் ரோஹன

நாங்கள் போட்ட பிச்சையால் தான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது நாங்களே வெறுப்படையும் வகையில் எங்களை இந்த அரசு விமர்சிக்கின்றது. இது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கட்சியில் உறுப்பினர்களுக்கு அரச பொறுப்புக்கள் பெற்றுக்கொடுக்கும் போது, இடமாற்றம் வழங்கும் போது பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மாகாண சபையில் சேவையில் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு விலக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக அனுபவமற்றவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எமது தரப்பினர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவதன் காரணமாக கட்சி ஆதரவாளர்களிடேயே பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படையாகக் கலந்துரையாட வேண்டும்.

எமது கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது எனக் கூறப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும் போது, எம்மையும் எதிரானவர்களாகப் பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பெரும்பாலான பிரச்சினைகள் காணப்படுகின்றது. ஆனால், எமது கட்சியை விமர்சிப்பதையே பெரும்பாலான அமைச்சர்கள் முதன்மையான விடயங்களாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் நாட்டில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவது கிடையாது.

அந்தவகையில் எங்களால் எதிர்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசு தற்போது எங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ​பேராசிரியர் அவர்களே! இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் துரோகங்களையும் நீங்கள் தான் விளைத்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள். எனவே, சலனமில்லாது அமைதியாக அவற்றின் விளைவை நிதானமாக அறுவடை செய்யுங்கள். இனத்துவேசத்தை பொதுமக்களிடையே ஊக்குவித்து இனப்பாகுபாட்டுக்காக பாடுபட்டீர்கள். அதன்விளைவு நிச்சியம் உங்களுக்குச் சார்பாகத்தான் இருக்கும்!

    ReplyDelete

Powered by Blogger.