Header Ads



சீனாவிடமிருந்து வாங்கிய முக கவசங்களில் குறைபாடு, சோதனையில் தெரியவந்த உண்மை

நெதர்லாந்தில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட நூறாயிரக்கணக்கான முக கவசங்களை திரும்ப பெற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது

நெதர்லாந்து சமீபத்தில் சீனாவிலிருந்து 1.3 மில்லியன் முககவசங்களை வாங்கியது. அதிலிருந்து நாடு முழுவதும் விநியோகித்த 6,00,000 முககவசங்களை திரும்ப பெற தற்போது முடிவுசெய்துள்ளது.

முககவசங்களின் தரத்தை சோதனை செய்ததில், அவற்றில் குறைபாடுள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாட்டில் உள்ள பல மருத்துவமனைகள் குறித்த முககவசத்தை நிராகரித்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு மில்லியன் கணக்கான முககவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சீனா அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

செர்பியா, லைபீரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், செக் குடியரசு ஆகியவை சீனாவின் பொருட்களைப் பெறும் நாடுகளாகும்.

நெதர்லாந்தில் கொரோனாவிற்கு 639 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,762 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.