Header Ads



காத்தான்குடி நகரசபை, ஹர்த்தாலுக்கு அழைப்பு


காத்தான்குடி நகரசபை மற்றும் வணிகசங்கமும் இணைந்து மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு எதிராக நாளையதினம் (11.03.2020) ஹர்த்தால் நடத்துவதற்கு பிரதேசவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தல் மையமாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்படவுள்ள இவ் ஹர்தால் தொடர்பில், காத்தான்குடி நகர்ப்புற கவுன்சில் மற்றும் வணிக சங்கம்  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

இதில், அனைத்து பிரதேசவாசிகளும் காலை தொழுகையை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன்  ஹர்தாலின் ஒரு பகுதியாக காத்தான்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடி பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு மட்டக்களப்பு வளாக தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு அனுப்பப்படுவதாக சுகாதார அமைச்சு கடந்த வாரம் அறிவித்தது.

இதற்கமைய, இன்று தென் கொரியாவைச் சேர்ந்த 179 இலங்கை மாணவர்களும், 2 தென் கொரியர்களும் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த இலங்கை மாணவர்கள் 15 பேரும் முதல் குழுவாக தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இது தற்போதைய அரசியல் சூழலில் ஒரு தனி அரசியல் வாதியின் நலனுக்காக சமூகத்தை பலிக்கடாவாகும் செயலாகும்! அத்துடன் குறிப்பிட்ட பிரதேச வாசிகள் நாடுமுழுவதும் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  2. there was no similar response in kattankudy when dambulla mosque destroyed. urban council backed by hizbullah forcefully opened the shops when someone closed their shops to protest agaianst demolishing the mosque. hizbullah was awarded as deputy minister for economic development for his strong solidarity in demolition the mosque in favor of Buddhist monks. Allah knows everything.

    ReplyDelete

Powered by Blogger.