March 10, 2020

முஸ்லிம்களின் உடம்பில் ஓடும் பாதி இரத்தம், சிங்கள தாய்மார்களின் இரத்தமாகும் - தம்ம ரத்ன தேரர்


- இக்பால் அலி -

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது நாட்டின்; மீதும் இந்நாட்டு சிங்கள மக்கள் மீதும் அதிக நேசம் வைத்துள்ளனர். அதேவேளையில் இவ்விரு இனங்களையும் அரசியல் நோக்கத்திற்காகப் பிரித்து வைக்கும் முயற்சிகளிலும்  வேறு நாடுகளின் தேவையின் காரணமாக இரு சமூகங்களையும் பிரித்து தூரமாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் முஸ்லிம்கள் சிங்கள, தமிழ் ஆகிய இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுடனும் கைகோர்த்துக் கொண்டு ஒற்றுமையாக வாழக் கூடியவர் என்று நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் பணிப்பாளர் வத்துரகும்பர தம்ம ரத்ன ஹிமி தேரர் தெரிவித்தார்

தெஹியங்க முருத்தலாவ. ரவாஹானிய்யாஹ்  அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா  அதிபர் மௌலவி ஏ. எல். அப்துல் கவ்பார் தலைமையில் இடம்பெற்றது  அந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் பணிப்பாளர் வத்துரகும்பர தம்ம ரத்ன ஹிமி தேரர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் , 

ஒரு முஸ்லிம் அரபுக் கல்லூரியில் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமிதம்  அடைகின்றேன். இந்த அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் சிறார்கள்  எதிர்கால மௌலவிமார்களாக உருவாவதிற்கான போதனைகளையும் மற்றும் அதே போன்று போதகர் நபி நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்கள் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தோற்று விக்கப்பட்டதாக நாம் அறிந்து கொள்கின்றேன். அந்த வகையில் எதிர்காலத்தில் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சமதானத்தையும் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் சமயத் தலைவர்கள் உருவாகும் இடமாகவும் எதிர்காலத்தில் சமயத் தலைவர்களாகவும் விளங்கும் சிறார்களுடன் உரையாற்றுவதில் நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன்.

நீங்களும் நாங்களும் சமயத் தலைவர்களாக உருவாகியதன் பின்னர் எங்கள் எல்லோருக்கும் இருப்பது ஒரே வகையான பொறுப்பாகும். நீங்கள் உங்கள் சமூகத்திலுள்ள மக்களிடமும் நாங்கள் எங்கள் சமூகத்திள்ள மக்களிடமும் பிழைகளைத் தடுத்து சமூக மயப்பத்தல் விடயங்களில் ஈடுபடுவதற்காகவே  நீங்கள் எல்லோரும் பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அதன் காரணமாக மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் மிகப் பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. உங்களுடைய பொறுப்பானது முறையற்ற நிலையில் இருந்து எங்கள் நாட்டிலுள்ள சிங்கள. தமிழ் முஸ்லிம் முதலிய அனைவரும் சக வாழ்வுடன் கைகோர்த்துக் கொண்டு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தோற்று விக்கப்பட்டதாகும்.  

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விசயம். இது அரபுக் கல்லூரியின் அதிபருக்கு தெரிந்து இருக்கலாம் எனக் கருதுகின்றேன்.  சில முஸ்லிம்களும்    சில சிங்களவர்களும் சில அரசியல்வாதிகளும் இப்பிரதேசத்தின் மேல் விஹாரை நிர்மாணிக்கும் போது சிறியளவில் சிங்கள முஸ்லிம் முரண்பாடுகள் ஏற்படும் என கருத்துக்களைப் பரப்புரை செய்ய முற்பட்டனர். எனினும் மிகவும் நல்லமுறையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.  சம்பிரதாய முஸ்லிம்கள் மீது நான் மிகவும் விருப்பம். அவர்கள் அடிப்படைவாதயில்லாதவர்கள். நான் அவர்களை சம்பிரதாய என்ற வசனத்தை  கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.  

நான் அறிந்த வரையிலும் சம்பிரதாய முஸ்லிம்கள் என்று நான் அடையாளப்படுத்துவது மலையகத்தில் கந்த உடரட்ட செனரத் என்ற அரச மன்னர் இருந்தார்.  அந்த அரசன் விவாகம் செய்தல் தொடர்பில் 'உடரட்ட வின்த' சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். 'உடரட்ட வின்த'  என்ற சட்டம் என்பதை   ஆண் ஒருவர்  பெண் ஒருவரிடம் சென்று அந்த பெண் வீட்டில் திருமணம் முடித்து அவர் அவ்Pட்டில் தங்கியதன் பின்னர் அவருக்கு கிடைக்கும் பிள்ளைகளுக்கு விவாகச் சட்ட ஒழுங்கின்படி பிறப்புபதிவுப் பத்திரம்  வைக்கும் போது அந்தப் பெண்ணுடைய பெயரும் இடம்பெற வேண்டும் என்ற சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

அநேகமான  அநேகமான முஸ்லிம் ஆண்கள் அரபிய நாடுகளில் இருந்து  இலங்கையில் வர்த்தகம் நோக்கம் காரணமாக வருகை தந்தனர்.  அவர்கள் இலங்கையிலுள்ள சிங்களத் தாய்மார்களை திருமணம் முடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அதன் பிரதிபலனான  அவர்களுக்கு கிடைத்த பிள்ளைகளுக்கு சிங்கள வாசகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள முதியவர்களில்  நூற்றுக்கு  80 விகிதமானவர்களுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் சிங்கள வாசகம் இருக்கிறது. 

இந்நாட்டில் இன  முரண்பாடு தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தோற்று விக்கப்பட்டதாகும். அடிப்படைவாதிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அல்லது வேறு நாடுகளுடைய தேவைகளின் காரணமாக எம் இருவரையும் பிரித்த தூரமாக்குவதற்கான பெரும் முயற்சிகளை அன்று செய்தார்கள். இன்று செய்கிறார்கள். நாளையும் செய்ய முடியாது என்று கூற முடியாது. நாளைக்கும் நடக்கலாம்.

எனினும் சம்பிரதாய முஸ்லிம் மக்களுக்கு காருண்யத்துடன் கூற விரும்புகின்றேன்.. சிங்களத் தாய்மாhகளின் பால்  அருந்தி வளர்ந்த முஸ்லிம் மக்கள் இன்னும் சிங்கள சமூகத்திற்கு மீது அன்பு கொண்டுள்ளனர்  இந்நாட்டின் மீது நேசம் வைத்துள்ளனர். இந்நாட்டின் இலங்கைப் பிரஜை என்ற வகையில் சிங்கள முஸ்லிம் தமிழ் ஆகிய மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு வாழ்வதற்கு இந்நாட்டு  சம்பிரதாய முஸ்லிம் மக்கள் இன்னும் விருப்பத்துடன் உள்ளனர். சம்பிரதாய முஸ்லிம் மக்களின் உடம்பில் ஓடும் இரத்தம் சிங்கள  தாய்மார்கள் வழங்கின   பாலின் இரத்தமாகும். அவர்கள் வழங்கி பாலின் மூலமாக முஸ்லிம் மக்களின் உடம்பில் ஓடும்  பாதி இரத்தம் சிங்கள தாய்மார்களின் இரத்தமாகும் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இந்நாட்டின் மீதுள்ள ஆதரவுடன் சிங்கள மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு தேவை உள்ளார்ந்த ரீதியில் சம்பிரதாய முஸ்லிம்கள் இந்நாட்டுக்குள் வாழ்ந்த வருகின்றனர். இந்நாட்டுக்குள் வாழும் அனைத்து முஸ்லிம்களிலும் மலையகத்தில் வாழும் முஸ்லிம்கள் சம்பிரதாய உரிமையை உரித்துடையவர்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தாh.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன். கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ், சிறப்ப விருந்தினராக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். டி முத்தலிப், ஜெய்னுலாப்தின் லாபிர், ஹிதாயத் சத்தார், யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர்களான வசீல் முக்தாh, ஏ. ஆர். எம். நலார் சமூகச் செயற்பாட்டாளா ஐ. ஐனுதீன் உள்ளிட்டவர்கள் கலந்த கொண்டனர். இதில் விசேடமாக கௌரவ அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் அவர்களினால் புதிய நூலகமும் திறந்த வைக்கப்பட்டது.


2 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் குழப்பவாதிகள் அல்லர். தேரர் அவரகள் கூறுவதுபோல் அவரகள் இந்நாடடின் குடிமக்கள். பௌத்த சிங்களவரகளின் வழித்தோன்றல்கள். இலங்கையின் பூர்வீக வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றை மாற்றியமைக்கப் பார்க்கின்றார்கள். பாடசாலைகளில் முஸ்லிம் பௌத்த உறவுகளும் சிறப்பாக மானிடத்தின் அதிமுக்கியத்துவம் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்போது நாட்டின் அழிவுநிலைநோக்கிப் பயணிக்கும் பொருளாதாரம் சிறப்புற்று விளங்கும். ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால் இலங்கை மக்களின் பணம்தான் அவரகளுக்கு நட்டஈடாக வழங்கப்படுகின்றது என்பதனை பொது மக்களுக்கு அறிவுறுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

YES IT IS TRUE NOT FOR ALL MUSLIM, JUST, ALI SABRI, FAISAL MUSTAFA, ADAVULLAA, ETC...

Post a Comment