Header Ads



ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு, பொலிஸ் பிணை வழங்கப்படாது

நாட்டில் இடைக்கிடையே அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இதேவேளை இன்று -27- பிற்பகல் அறிக்கை ஒன்றை விடுத்து ஜனாதிபதி ஊடகப்பிரிவும் நாட்டில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை சரியான பின்பற்றுமாறு கேட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தடையின்றி வழங்களை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை முகாமைத்துவம் செய்வதற்கு பொறுப்பான செயலணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளில் நடமாட கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஊரடங்கு அமுலில் உள்ள போது நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பயணம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தடையின்றி வழங்களை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை முகாமைத்துவம் செய்வதற்கு பொறுப்பான செயலணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் செயலணியினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் வீதிகளில் பயணம் செய்ய முடியும் எனவும் வேறு எந்த ஒரு வாகனமும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்ய முடியாது எனவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

எவ்வாறாயினும் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகள், சிறு தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் விமான நிலைய மற்றும் துறைமுக சேவைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த 20 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 4,018 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல் 1,033 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை ஊரடங்கு சட்டம் காரணமாக தத்தமது வீடுகளுக்கு பயணிக்க முடியாதிருந்த கட்டுநாயக்க பொருளாதார மத்திய நிலைய ஊழியர்களுக்கு இன்று இராணுவத்தின் உதவியுடன் அவர்களது செல்ல முடிந்தது. 

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன 

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை அரசாங்கத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமை மற்றும் பொது மக்களை அசௌகரியப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் 0114 35 45 50 அல்லது 0114 35 46 55 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேபோல் கொரோனா தொற்று குறித்து அறிவிக்க 0112 86 000 3 அல்லது 0112 86 000 4 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.