Header Ads



இந்த பூமி, மனிதர்களுக்கு மட்டுமா?

- சஹீம் ஹுஸைன் -

இந்த பூமி யாருக்கு சொந்தம் நிச்சயமாக மனிதனுக்கு மட்டும் இல்லை. எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த பூமி. ஆனால் நாம் என்ன செய்தோம் மற்றைய உயிரினங்களை எல்லாம் அவரவர் வாழ்விடங்களை விட்டு துரத்தி, விரட்டி, கொண்று குவித்துவிட்டு அந்த இடங்களை எல்லாம் நாம் ஆக்கிரமித்தோம். காடுகளை அழித்து வீடுகளை கட்டினோம், கடலை குப்பை கிடங்காக மாற்றினோம், காற்றை மாசுபடுத்தி பறவைகளையும் வாழ முடியாத நிலமைக்கு தள்ளினோம். மனசாட்சி உள்ள யாராவது இதை பற்றி கேட்ட நேரம். வலிமை உள்ள உயரினம்தான் பூமியில் வாழ தகுதி இருக்கின்றது அப்படி என்று திமிரா தத்துவம் பேசினோம்.
இப்போது அந்த கடவுளே பொறுமை இழந்துவிட்டார் போல் இருக்கிறது. இதை நம்பமுடியாதவர்கள் இயற்கை என்று சொல்லிக்கொள்ளுங்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரே ஒரு வைரஸ். கண்ணுக்கே தெரியாத ஒரு கிருமியை அனுப்பி ஒட்டு மொத்த மனித இனத்தோட கண்ணிலயும் விரல விட்டு ஆட்ட வைத்திருப்பதை பார்த்தீர்களா. 

உலகம் பூராவும் மிரண்டுபோய் நிற்கின்றது. ஊரடங்கு அறிவித்தலினால் எல்லோரும் வீட்டுக்குள்ளே பதுங்கினாலும் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆனானபட்ட அதிபர்கலாலையும், சினிமா கீரோகலாலையும் கூட முடியவில்லை. இப்படி நடக்கும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னாடி சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள். கிறுக்கன் உழருகான் என்று சொல்லி திட்டி இருப்பிர்கள் அப்படித்தானே.

இப்போது என்ன நடந்து விட்டது இரண்டே மாதத்தில் உலகம் பூராகவும் மாற்றம், தலைகீழ் மாற்றம்.

வாகனம்கள் ஓடாததன் காரணத்தினால் நைட்ரஜன் டையோக்சைட்யின்(nitrogen dyogsyt) அளவு செரிந்து காணப்படுகின்றது. காற்று மாசு சரிறேன்று குறைந்துவிட்டது. மரம், செடி, கொடி எல்லாம் கிடுகிடென்று வளர்ந்து பசுமையாக எம்மைப்போலவே சிரிக்கிறது. 

கப்பல், படகு, மீன்பிடி, குளியல் எதுவுமே இல்லாமல் கடல் தண்ணீர், ஆற்று தண்ணீர் எல்லாம் தெளிந்து இருக்கின்றது. கொண்டொலா போர்ட்ஸ் (gondola boat) பார்த்து இருப்பீர்கள். அதோட துடுப்புகள் அடிக்காத வெனிஸ் நகர வாய்க்கால் தண்ணீரை அப்படியே அள்ளிக் குடிக்கலாம் போல் இருக்கின்றது. அண்ணப்பறவைகள் எல்லாமே அழகாக சந்தோசமாக மிதந்து போகின்றது.

இத்தாலி கடற்கரை பக்கம் போனால். ஆழ்கடலுக்குள் போய் இருந்த டால்பின்கள், விரட்டி அடிக்கப்பட்ட டால்பீன்கள் மீண்டும் கரையோரம் வந்து நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டு இருக்கின்றது. அதிவேக கார்ஸ்(high speed cars) எல்லாம் பறக்காத ஒரு சிங்கப்பூரை நாம் இப்பதான் பார்க்கின்றோம். வீதியோர பார்க்குகளிலே எல்லாம் நீர் நாய்கள் குதித்து உருண்டு புரளுகின்றது. இதுவரைக்கும் இவைகளெல்லாம் கண்ணிலேயே படாமல் இருந்தது.

இஸ்ரேலை பாருங்கள். டெல் அவிவ் (Tel Aviv-Ben Gurion)எயார்போட்டில் பிலேன்(plane) எல்லாம் வராததின் காரணத்தினாலே  எகிப்திய வாத்துக்கள் ஜாலியாக வாக்கிங் போகின்றது.

சிகாகோ அக்வாரியத்தை(Shedd Aquarium-chicago) பார்த்தால். அங்கு மனிதனுக்கு தடை விதித்ததினாலே அவர்கள் யாரும் வருவது இல்லை. ஆனால் அங்கயே வாழ்கின்ற எட்வர்ட்,யானி என்ற இரண்டு பென்குயின்களும் ஜோடியாக சுத்தி சுத்தி வந்து மற்றைய கடல்வாழ் பிராணிகளுக்கு ஹாய் சொல்லி நலன் விசாரித்துக்கொள்வதை பார்க்கின்றோம். 

மனிதன் சுதந்திரமாக சுத்தித்திரிந்த நேரம். வாழ வழிதெரியாமல் தவித்திக்கொண்டிருந்த மிருகங்கள், பறவைகள், புழு, பூச்சி எல்லாம் மனிதர்கள் அவர்களின் வீடுகளில் அடங்கிக்கிடக்கின்ற இந்த நேரத்தில் சுதந்திரமாக சுத்தித்திரிந்து வாழ்வதை பார்க்கும்போது கொரோனா வந்ததே இதற்காகத்தானா என்கின்ற சந்தேகம் வருகின்றது. எந்தப்பக்கம் திரும்பினாலும் ஐந்து அறிவு உயரினங்கள் எல்லாம் அவரவர் இடங்களில் ஆனந்தமாக வாழ்வதை பார்க்க முடிகின்றது.

மற்றைய நாடுகளுக்கெல்லாம் வந்த நிலைமை நம் நாட்டுக்கு இதுவரைக்கும் வரவில்லை. வராது என்று நிச்சயமாக யாராலும் சொல்லவும் முடியாது. ஆனால் வரக்கூடாதென்று தடுப்பதற்காகவேண்டிதான் இன்றைய காலங்களில் அரசாங்கம் எமக்காக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து எப்படியாவது நம் நாட்டு மக்களை இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காகவேண்டி இராணுவத்தினரும், அரசாங்கமும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நேரம் நாம் என்ன செய்யலாம். நமது வீட்டில் நமது குடும்பத்தோடு ஒன்றாக இருக்கின்ற அந்த நேரத்தில் கட்டாயம் இதைப்பற்றி பேசுவோம், யோசிப்போம். இயற்கைக்கு விரோதமாக இதுவரைக்கும் நாம் என்னென்ன பாவங்கள் எல்லாம் செய்தோம். அவ்வாறெல்லாம் நினைத்துப்பார்த்து நாயோ,  பூனையோ, ஆடோ, மாடோ, ஆமையோ, கோழியோ, குருவியோ வேறு எந்த உயிரினமோ இந்த பூமியில் நமது சம்மதம் இல்லாமல் வாழவே கூடாதென்று தடுத்து, விரட்டி அடித்தது எல்லாம் ஒரு தரம் மீட்டிப்பார்ப்போம்.

இந்த பூமி நமக்கானது மட்டும் இல்லை. மற்றைய எல்லா ஜீவராசிகளுடனும் கொஞ்ச காலம் இணைந்து, கலந்து வாழ்ந்துவிட்டு அதன்பிறகு உயிரிழந்து போய்விடுங்கள். அவ்வாறு சொல்லி நமக்கும் இந்த பூமியை வாடகைக்கு விட்டிருக்கின்றார் கடவுள். அதை நாம் இப்போதாவது புரிந்து கொண்டு இதைப்பற்றிப்பேசி, உணர்ந்து, மனதாற நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்ப்போம். நம் வாழ்கையை, நாம் வாழ்கின்ற முறையை மறுபடியும் எழிமையாக்குவோம். சக மனிதர்களை மட்டும் அல்லாமல் எல்லா உயிரினங்களையும் மதிப்போம். அவ்வாறென்று குடும்பமே கைசேர்த்து ஒரு உறுதி எடுப்போம்.  

இயற்கையுடன் ஒன்றித்து வாழ்வோம்.

குறிப்பு:- 
இந்த கட்டுரை ஆக்கம் ஓர் விடியோ பதிவைக்கொண்டு எழுத்து வடிவில் என்னால்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில சொற்கள், வசனங்கள் புதிதாகவும் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் அகற்றப்பட்டுள்ளது. வேறு நாட்டில் ஓர் விடயத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டதை எமது நட்டு தற்கால நிகழ்வோடு ஒப்பீட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.