Header Ads



தேவையற்ற செய்திகளைப் பரப்பி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்

கராச்சியில் 123 பேரும் சுக்குர் பகுதியில் 210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

``பிரதமர் மோடியைப் போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். ஆனால், எங்களால் முடியாது. அப்படி அறிவித்தால் எங்களது நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். எங்களது நாட்டிலும் கொரோனா பிடியில் மக்கள் அல்லாடுகிறார்கள்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``பாகிஸ்தானில் 25 சதவிகித மக்கள் அன்றாடக் கூலியை நம்பியிருக்கிறார்கள். இங்கு முழு அடைப்பு என்பது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ள இம்ரான்கான், மக்களின் துன்பத்தைக் குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, சிந்து மாகாணத்தில் மட்டும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கராச்சியில் 123 பேரும் சுக்குர் பகுதியில் 210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சமூகத்திலிருந்து விலகுதல், சுயமாகத் தனித்திருத்தல், போன்றவற்றை வரவேற்பதாகக் கூறிய அவர், தேவையற்ற செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.