Header Ads



தேர்தலுக்குப் பின் புதிய அரசமைப்பு, உடனடியாக மாகாணசபைத் தேர்தல் - மஹிந்த

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளும், இந்தப் 19ஆவது திருத்தம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அ​லரி மாளிகையில் இன்று (09), ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்துக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர், உடனடியாக மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்க முடியுமென்றுள்ளார்.

1 comment:

  1. எதைச் சொன்னாலும் அதைக் கேட்கும் கலாசாரமாக இலங்கை அரசு மாறிக் கொண்டே செல்கிறது. அவர்களின் தேவை, முன்னுரிமைக்கு முன்னால் அரசாங்கம், அதன் உயரிய சட்டங்கள்,நீதி,நியாயம் அனைத்தும் செல்லாக்காசுகள் என்ற நிலைமைக்கு இந்த நாடு மிகவிரைவில் செல்ல இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.