March 09, 2020

முஸ்லிம் தலைமைகளை இணைக்க முயற்சி - அதாவுல்லா நிராகரிப்பு


பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என முஸ்லிம் கட்சிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை என அறியவருகிறது. அதேவேளை முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் நேற்று 8 மாலைவரை எந்த முடிவையும் எட்டியிருக்கவில்லை. இதேவேளை தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இன்று  மாலை தீர்மானமொன்று எட்டப்படலாம் என இரு கட்சிகளினதும் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க  அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து இணைந்த கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற அவசியத்தை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி வலியிறுத்தி வருகின்ற நிலையில் அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் அவ்வாறு கூட்டணி அமைக்கப்பட்டால் அக்கூட்டணியில் தாம் இணைந்துகொள்ளப் போவதில்லையென்றும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தேசிய காங்கிரஸின் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நாடு திரும்பியதுமே அவரது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இதுவரை எந்த முஸ்லிம் கட்சிகளும் தாம் தனித்து அல்லது கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெதையும் நேற்றுவரை அறிவித்திருக்கவில்லை.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது, இன்று பிற்பகலுக்குப் பின்னர் முடிவு எட்டப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டனர்.

இதே வேறு தமிழ்,முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதை தான் வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ராஜகிரிய குறூப் நிருபர்

8 கருத்துரைகள்:

ஹிஸ்புல்லா மடகஸ்காரிலிருந்து வந்தவுடன்

பேச்சு வார்த்தைக்கு இணங்கி முஸ்லீம் காட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க அதாவுல்லா மறுத்தால் அதாவுல்லாவின் வாக்கு வங்கி நிலைமை கவணக்கீடாக மாறிவிடும்.அத்தோடு முஸ்லீம் சமூகத்தின் சாபாக்கேட்டினை சந்திக்க வேண்டி வரும்.
மர்சூக் மன்சூர்- தோப்பூர் -07

No more minister posts for them
what a losers

Dear Mr.Mansoor
Mr.Athaullah knows how to manage his vote bank, and he knows who will vote him. Also we know how to send him to parliament .

Neenga onkuda wayaum soothayum pothiki onkuda welaya mattum paarunko

why you guys are making Adavulla hero, He never get vote, since he start this horse, he use the hose game, so leave him alone, nothing will happen, he join or left. but Hakeem and Rishad, pls pls, dont devide, ask in one team

றிசாட் அவர்களும் ஹக்கீம் அவர்களும் சேர்ந்து எந்த அமைப்புடன் கூட்டு சேர்வார்கள் என்பதை அதாவுக்கு எதிராக விமர்சிக்கும் வாசகர்கள் சொல்லுங்கள்.
இப்பொழுது நாட்டின் நிலைமை மதமோ இனமோ சார்ந்த பெயருடன் களமிறங்குவது வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அம்மக்களுக்கு பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம் அல்லவா.
மேலும் அதா ரணிலினதோ அல்லது சஜித்தினதோ கூட்டணியில் இணைவதற்கு சாத்தியங்கள் மிக குறைவு.
எனவே அவரை விமர்சிக்காமல் மற்றவர்கள் இருவரும் முயற்சி செய்யட்டும்.
இந்த ஐந்து வருடங்களாக தேவையில்லாத அதா சஜித் ஜனாதிபதியாக வந்திருந்தால் தேவைப்பட்டிருப்பாரோ?

If Rishad and Hakeem could make an alliance, please prove that.
We people never think they could merge together. Leave Athaullah on his way.

Post a Comment