Header Ads



கொரோனா வைரஸால் ஐரோப்பாவில், ஏற்பட்ட ஒரேயொரு நன்மை

உலகளவில் கொரோனா வைரஸிற்கு அதிக உயிர்களை பலிகொடுத்துள்ளது ஐரோப்பா கண்டம். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்த எதிர்மறை செய்திகளுக்கு நடுவே, ஒரே ஒரு நல்ல செய்தியாக, ஐரோப்பா முழுவதும் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. போக்குவரத்து, தொழிற்சாலைகள் இயங்காதது போன்ற காரணங்களால், காற்று மாசுபாடு கணிசமான சரிவை சந்தித்துள்ளது.

பாரிஸ், மாட்ரிட் உள்ளிட்ட மூன்று ஐரோப்பிய நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதை, சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. கோப்பர்நிக்கஸ் சென்டினல் -5 பி செயற்கைக்கோள், மார்ச் 14 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு செறிவுகளைக் காட்டும், மூன்று கலப்பு படங்களை எடுத்துள்ளது. இதனை ஐரோப்பிய விண்வெளித் துறை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதில் தான் இத்தகவல் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஏராளமான மக்கள் மோசமான சுகாதார சீர்கேடுகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாகனங்கள், தொழிற்சாலைகளிலில் இருந்து வெளியேறும் நச்சு புகையான, நைட்ரஜன் டை ஆக்சைடால், சுவாசக் கோளாறு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும்.

No comments

Powered by Blogger.