Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவிற்கு, நரேந்திர மோடி நன்றி தெரிவிப்பு

(நா.தனுஜா)

சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக முழு உலகுமே பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில்இ இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான வீடியோ மாநாடொன்று கடந்த 15 ஆம் திகதி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது.

அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில்  இணக்கம் காணப்பட்டது. அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்:

'சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ எதிர்கொள்வதற்கான அவசர நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான வைரஸ் தொற்றை எதிர்கொண்டு இல்லாதொழிப்பதில் எமக்கு இடையிலான ஒதநுழைப்பு வலுவாகத் தொடரும்'.

அதேவேளை இந்நிதியத்திற்காக ஆப்கானிஸ்தான் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களையும்இ பங்களாதேஷ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வீட்டு நிலைமை அல்லோல கல்லோலம்.சென்ற மாதம் முதல் முதியோருக்கும்,நோயாளிகளுக்கும் மாதாந்தம் வழங்கப்படும் மானியம் இன்னும் கொடுபடவில்லை. அவர்கள் அன்றைய உணவுக்கும் மருந்துக்கும் தவியாகத் தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். பசியும் பட்டினியும் மட்டுமன்றி மருந்து வாங்க வசதிகளின்றி நோயால் அல்லல்படும் அப்பாவிநோயாளர்களுக்கு செல்ல இடமில்லை. பணக்கார ர்கள் வியாபாரம் இன்றி அவர்களின் வர்த்தகம் முடக்கப்பட்டிருக்கின்றது. ஏழைகள் எங்கேசெல்வது, இவ்வளவுக்கும் மத்தியில் இலங்கை சார்க் நாடுகளுக்கு ஒரு மில்லியன் உதவிசெய்த தாதம். இது யாருக்குக் காட்டும் நாடகம் என்று தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.