Header Ads



நீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்

- Ajaaz -

இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்...

நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடையர் கும்பலொன்று நுழைந்து அங்கு பலாத்காரமாக அமர்ந்து மதுபானம் அருந்த முற்பட்ட போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கெக்கிராவ, கணேவள்பொளயைச் சேர்ந்த 33 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் என்பவர் (என் சொந்த மச்சான், உம்மாவின் தம்பியின் மகன்) அநியாயமாக வெட்டப் பட்டு ஸ்தலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்... அவர் அந்த ஹோட்டலில் வேலைசெய்து வந்தவர். சம்பவத்தில் நேரடியாகத் தலையிடாமல் இருந்துள்ள நிலையிலும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் உட்பட இன்னும் இருவர் மருத்துவ மனையில் உள்ளனர். 

இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

1. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் இறப்பும் இறைவனின் கைகளில் உள்ளவை என ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்புகிறார். எனவே என் மச்சானின் மரணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது இறைநாட்டம் எனப் பொருந்திக் கொள்வோம். அவருக்காக துஆ செய்வோம். இந்தக் கொலையால் பேரிழப்புக்கு ஆளாகியுள்ள அவரது மனைவி மக்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்போம். இது முதலாவது விடயம்.

2. இது திட்டமிடப்பட்ட ஓர் அராஜகமாகவே இருக்க வேண்டும். இரண்டு வேன்களில் கத்தி, வாள்களோடு சாதாரணமாக யாரும் பயணிப்பதில்லை. மதுபானம் விற்பதும் அருந்துவதும் தடைசெய்யப்பட்ட ஒரு போயா தினமான நேற்று இந்த அராஜகம் நடந்துள்ளது. இதற்குப் பின்னால் அரச அதிகார வர்க்கம் நிச்சயம் இருக்க வேண்டும். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. கொலையாளிகள் வந்த இரு வேன்களில் ஒன்றும் ஸ்தலத்திலேயே விட்டுச்செல்லப்பட்டுப் பொலிஸாரால் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் வாக்குக் கொள்ளைக்கான வன்முறை முயற்சியாகவே இருக்க வேண்டும்.

3. திகன வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்தது சிங்கள வாலிபர் ஒருவர் முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டார். கொலைசெய்யப்படவில்லை. தாக்கப்பட்ட சிங்களச் சகோதரர் தானாகவே மருத்துவமனைக்குச் சென்று பல நாட்கள் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறி, தன் குடும்பத்தார் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்த உணவு பானங்களை உட்கொண்டு சாதாரண நிலையில் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்துவந்த நிலையில்தான் மர்மமான முறையில் இறந்துபோனார். அதைச் சாட்டாக வைத்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமதியான சொத்தழிப்புகளோடு ஒரு முஸ்லிம் இளைஞனின் உயிரும் பலியெடுக்கப்பட்டது.

நேற்றைய அராஜகம் தலைகீழாக நடந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் ! அதாவது ஒரு போயா தினத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இவ்வாறு சிங்களச் சகோதரர் ஒருவரது ஹோட்டலுக்குள் நுழைந்து பலாத்காரமாக அங்கே மதுபானம் அருந்த முற்பட்டு அதனால் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு சிங்கள இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தால் இன்று மொத்த நாடும் ரத்தக் களறியாகி இருக்கும்.. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் தீவைக்கப்பட்டிருக்கும், கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்..பலநூறு முஸ்லிம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கும் ! எல்லா ஊடகங்களும் ப்ரேகிங்க் நியூஸ் போட்டுத் தள்ளியிருக்கும்.. கொல்லப்பட்டவரின் குடுப்பத்தாரின் அலறல்களையும் கூப்பாடு கூச்சல்களையும் திரும்பத்திரும்பக் காட்டிக் காட்டி நாடு முழுதும் வன்முறையை தீயாகப் பரப்பி இருக்கும்...

ஆனால் இந்தக் கொடூர சம்பவம் இன்றைய பத்திரிகைகள் எதிலும் வெளியாகவில்லை, இதுவரை தொலைக்காட்சிகளிலும் எந்தச் செய்தியும் சொல்லப்படவும் இல்லை..

4. கொலையாளிகள் வந்த வேன்களில் ஒன்று பாதுகாப்பாக இருந்தது ! பொலிஸார் வந்து அதைக் கொண்டுபோய் உள்ளனர். இதே நிகழ்வு மற்ற மாதிரி நடந்திருந்தால் - அதாவது கொலையாளிகள் முஸ்லிம்களாகவும் கொல்லப்பட்டவர் சிங்களவராகவும் இருந்திருந்தால் முதலில் அந்த வேன் அதே இடத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும். அத்துடன் பாதையில் போகும் வரும் வாகனங்களைச் சோதித்து முஸ்லிம்களின் வாகனங்களும் நூற்றுக்கணக்கில் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கும்.. 

இதுதான் முஸ்லிம்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் ! 

நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். அநியாயக்காரர்களை அவர்களின் நேரம் வரும்வரை விட்டு வைத்திருக்கிறான். பொறுமை காப்போம் இளைஞர்களே ! நாமும் உணர்ச்சிவயப்பட்டு, வன்முறைகளில் இறங்க வேண்டும், அதை வாய்ப்பாகக் கையிடுத்துக்கொண்டு மீண்டும் அளுத்கமை, திகன, அம்பாறை, குளியாப்பிட்டிய போன்று பேரழிவுகளை முன்னெடுக்கும் திட்டத்தில்தான் இந்த அராஜகங்களை எல்லாம் செய்கிறார்கள்.. நாம் அவசரப்பட்டு அவர்களது சதிவலைக்குள் சிக்கிவிடக் கூடாது இளைஞர்களே !

எல்லாவற்றுக்கும் ஒரு காலமும் நேரமும் முடிவும் உள்ளது. பொறுத்திருப்போம். இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவோம். நீதி தீர்ப்பவர்களில் இறைவன் மகத்தானவன் ! 

அல்லாஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு !

10 comments:

  1. nichayamaha allah aniyayakaran yaraium vida mattan.

    ReplyDelete
  2. ஒரு பக்குவமான செய்தி.
    வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் பெருந்திக்கொள்வானாக !

    ReplyDelete
  3. என்னுடைய கருத்து என்னவென்றால் எங்கள் சகோதர்கள் நடந்துகொண்ட முறை தான் முற்றிலும் தவறானது அவர்கள் அன்னியவர்கள் மது அருந்த அங்கு வந்தார்கள்,வந்தவர்களை உடனே ஏசி திரட்டி விடுவோம் என்ற நிலைப்பாட்டில் கடை உரிமையாளர்கள் வந்தவர்களோடு தர்க்கம் செய்துள்ளார்கள் இது முற்றிலும் தவறானது.கடை உரிமையாளர் முதலில் இலகுவான முறையில் வாடிக்கையாளர்களோடு நடந்துகொண்டு முடியாத சந்தர்ப்பத்தில் தான் போலீசை அழைத்து இருக்கவேண்டும் அவ்வாறு செய்யாமல் கடைசியில் ஒருவரின் உயிரே இழக்க வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. Ameen Brother May Allah Almighty bless you and give you strength and courage to you, your family and to our society.

    ReplyDelete
  5. Allahuma Aizzal Islama wal Muslimeen.

    ReplyDelete
  6. ماشاء الله أللهم مغفرلكم بما أصابكم

    ReplyDelete
  7. Ya Allah ! grant him Jannathul Firdous. Aameen.

    ReplyDelete
  8. WHEN YOU STAND YOU CAN STOP, UNLESS IT WILL BE LIKE THIS, YOU JUST MAKE DUA AND ENJOY WITH YOUR WIFE, BE A SLAVE

    ReplyDelete
  9. இறைவனின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

Powered by Blogger.