Header Ads



சவுதிக்கான விமான, பயணங்கள் ரத்து - ஸ்ரீலங்கன் விமான சேவை


உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதற்கு மேலதிகமாக சவுதி அரேபியாவின் ஜேடாவுக்கான விமான சேவைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும் நிலைமை வழமைக்கு திரும்பினால் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் விமான சேவையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.