Header Ads



மாணவிகளின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, உட்செலுத்தப்பட்டு பகிடிவதை


ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குள்ளான பசிந்து ஹிருஷான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த மாணவரின் தலைப்பகுதியில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், ரயர் ஒன்று விழுந்தமையினால் தலையின் உட்பகுதி மற்றும் மூளை  ஆகிய பகுதிகள் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்துள்ளார் என சுனில் டி சில்வா என்ற பாதிரியார் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இடுகை ஒன்றினை பதிவேற்றம் செய்திருந்தார்.

அத்துடன் பசிந்து ஹிருஷான் குணமடைய வேண்டும் என விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான முன்னாள் உத்தியோகத்தர் பாட்டக்க குமாரசிங்க இன்றைய 11,03,2020 தினம் விசேட அறிவிப்பு ஒன்றினை எமக்கு தந்திருந்தார்.

'ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையினால் ஏற்கனவே மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், பகிடி வதையினால் சில மாணவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர் எனவும், புதிதாக இணைந்துக்கொள்ளும் மாணவிகளின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தியை உட்செலுத்துவதாகவும் குமாரசிங்கவின் முகநூலில் இடுகையொன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.'

3 comments:

  1. Why the government still struggling to take punitive measures against these criminals?

    ReplyDelete
  2. Cause of this crime is nothing but the university administration and the govt. Why cant they prohibit this crime inside the university?

    ReplyDelete
  3. Still the government is sleeping? Must take action against these dogs or all the parents should take action against these dogs...

    ReplyDelete

Powered by Blogger.