Header Ads



முத்தமிடுவதையும், கைகுலுக்குவதையும் நிறுத்துமாறு சுவிஸ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் சுவிஸ் மக்களுக்கு இப்போது முத்தமிட்டுக் கொள்வதற்கும் சோதனை வந்துள்ளது.

மன்னிக்க வேண்டும், நாம் சுவிஸ் நாட்டவர்கள்தான், ஆனால் கொரோனாவுக்கு அதெல்லாம் தெரியாது, ஆகவே தயவுசெய்து முத்தமிடுவதை தவிர்க்கவும் என சுவிஸ் சுகாதாரத்துறை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தனது பக்கத்து நாடான பிரான்சைப் போலவே, சுவிஸ் மக்களும் மற்றவர்களை வாழ்த்துவதற்காக கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வர்.

பிரான்ஸ் மக்கள் ஐந்து முத்தங்கள் வரை கொடுக்கும் நிலையில், சுவிஸ் நாட்டவர்கள் மூன்று முத்தங்கள் கொடுப்பார்கள்.

மக்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் சற்று விலகியே இருப்பது கொரோனா வைரஸ் பரவுதை தவிர்க்க சிறந்த வழி என்பது நமக்கே தெரியும், அதனால்தான் முத்தமிடுவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset.

பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran அறிவித்ததைப்போலவே, சுவிஸ் தொற்றுநோய்த்துறை தலைவரான Daniel Koch என்பவரும் உடனடியாக கைகுலுக்குவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, 1,000 பேருக்கு அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு மார்ச் 15 வரை தடை விதித்துள்ளது சுவிட்சர்லாந்து.

No comments

Powered by Blogger.