Header Ads



ராஜிதவின் கோரிக்கை நிராகரிப்பு, உடனடியாக வெளியேற உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மேலும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கோரியுள்ளார்.

தனது கோரிக்கையை அவர் பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எழுத்துபூர்வமாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவரின் கோரிக்கையை எந்த வகையிலும் வழங்க முடியாது என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்னக்கோன் கூறியுள்ளார்.

அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மூன்று மாதங்களுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் தங்கள் வாசஸ்தலங்களை விட்டு வெளியேற அரசாங்கம் அவகாசம் அளித்திருந்தாலும், ராஜித சேனரத்ன தொடர்ந்து வாசஸ்தலத்தை பயன்படுத்துகிறார்.

1 comment:

  1. அமைச்சரவை அமைச்சராக பல வருடங்கள் சம்பளத்துடன் எத்தனையோ சலுகைகளும் பணக் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டதுடன், மீன்பிடித்துறை அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் இருக்கும் போது கமிசன்,விசேட கொடுப்பனவு என ஆயிரமாயிரம் கோடி சம்பாதித்து அவற்றை சூட்சுமமாக பதுக்கிவைத்து இன்னமும் பதவி இழந்தபின்பும் பொதுமக்கள் செலவில் வாழ முயலும் இது போன்ற அமைச்சர்களின் நடத்தை பற்றி பொது மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம். பதவிக்கும் சுயமரியாதைக்கும் கேவலம் என்பது மட்டும்தான் நன்றாக அனைவரும் தெரிந்த விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.