Header Ads



மைத்ரிக்கு வேட்புமனு கொடுக்க வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருக்க மஹிந்தவிடமும் சுட்டிக்காட்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாமென அக்கட்சியின் தலைவர் மஹிந்த மஹிந்த ராஜபக்சவை உட்கட்சி பிரமுகர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பொதுநிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மைத்ரி வெளியிட்டு வருவதால் தேர்தல் காலத்தில் அதன் தாக்கங்கள் ஏற்படலாமெனக் கருதியே இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுவதாக அறியமுடிந்தது.

மைத்ரி உள்ளூர் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் விமர்சனங்கள் அவரின் பழிவாங்கும் உள்ளக நோக்கத்தை காட்டுவதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மேற்படி பிரமுகர்கள் மஹிந்தவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான பிரமுகர்கள் பலர் தாமரை மொட்டு கட்சியில் இணைய பசில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர். மைத்திரியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள தயாசிறி ஜயசேகர உட்பட்ட பலர் எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டின் வேட்பாளர்களாக களமிறங்க யோசித்து வருகின்றனர்.

இதேவேளை பொலனறுவை மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளை பெற்று அடுத்த பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை பெற மைத்ரி யோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.ஆனால் அது அவருக்கு வழங்கப்படும் சாத்தியம் இல்லையென அறியமுடிந்தது. sivaraja

No comments

Powered by Blogger.