Header Ads



கொரோனாவுக்கு எதிரான மாத்திரை ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்டது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜப்பான் நன்கொடையாக வழங்கியுள்ள ‘எவிகன்’ மாத்திரைகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

5000 மாத்திரைகள் இவ்வாறு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குறித்த மருந்துகள் கொரோனா - கொவிட் 19 தொற்றுக்கு எதிராக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கொவிட் 19 என சந்தேகிக்கப்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எவிகன் மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதனை  சீனாவும் தருவித்து , கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது.  

இதன்போது அந்த மாத்திரை கொரோனா வைரஸுக்கு எதிராக செயற்படுகின்றமை உறுதி செய்யப்பட்ட நிலையில், அது குறித்து சீனாவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்தே, இந்த எவிகன் மாத்திரையை ஜப்பான் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவும் தீர்மானித்து அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

1 comment:

Powered by Blogger.