Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித், பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிப்பார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம்  ஸ்தாபிக்கப்படும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று 04 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்தொதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

பொதுஜன பெரமுன  தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு  ஐக்கிய தேசிய கட்சியினர் உதவி புரிகின்றார்கள். கட்சியின்   தலைமைத்துவம் தொடக்கம் உறுப்பினர்கள் வரையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை பொதுஜன பெரமுனவிற்கு  சாதகமாக  உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. kelmbittaanya kelambittaaanya...... Ini konj munnala valarum ivarukk..!!!

    ReplyDelete
  2. MR.BIG MOUTH DILAN LAST TIME YOU LOST AND WENT TO PARLIAMENT BEGGING MY3 AND ON NATIONAL LIST.THIS TIME IF YOU CONTEST YOU WILL LOOSE AND WILL NOT GET A CHANCE ON NATIONAL LIST.AFTER APRIL ELECTION YOU WILL BECOME POLITICAL REFUGE. SO LEAVE ALONE SAJITH AND THING ABOUT YOUR FUTURE.

    ReplyDelete

Powered by Blogger.