Header Ads



பூட்டியுள்ள மதரஸாக்களை கொரோனா, ஒழிப்புக்காக திறந்துவிட முன்வர வேண்டும் - அமீன்

நாடு மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், முஸ்லிம்கள் இதன் பாரதூரத்தை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டுமென சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும், முப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் சகல திட்டங்களுக்கும் எமது சமூகம் உயர்தர பங்களிப்பை நல்கிடல் வேண்டும்.

தற்போது கொரோனா ஆரம்ப தொற்றுள்ளவர்களை அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன்பொருட்டு கட்டிடங்கள் தேவையாகவுள்ளது.

தற்போது மத்ரஸாக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே மத்ரஸா நிர்வாகங்கள் கோரோனா ஒழிப்பில் தாமும் பங்காளர்களாக, மத்ரஸாக்களை தற்காலிகமாக அரசாங்கத்திற்கு வழங்கலாம். 

உரிய தரப்பினர் அதனை உரியமுறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். நாடு பூராகவும் முஸ்லிம் சமூகத்திடம் மத்ரஸாக்கள் உள்ள நிலையில் அவற்றை வழங்குவது சிறந்த முன்னுதாரண செயற்பாடாக அமையும். 

முஸ்லிம் - சிங்கள தவறான அபிப்பிராயங்கள் ஓரளவேனும் நீங்கவும் இது உதவும் எனவும் அமீன் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. நானும் சில நாட்களுக்கு முன் இங்கே பதிவிட்ட விடயத்தை அமின் அவர்களும் தற்போது கூறியிருக்கிறார்கள்.எனவே முடிந்தலவு அரசுக்கு தேவையான இட வசதியை எமது சமூகம் இந்த இக்கட்டான நிலமையில் வழங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.