Header Ads



எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் - கமல் குணரத்ன

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தனது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் உள்ள இலங்கை பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற சமூக ஊடக நிபுணத்துவ அமைப்பின் தொழில்துறை நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1 comment:

  1. சர்வதேச அரசியல், இராஜதந்திரம், சாணக்கியமாக ஒரு விடயத்தைக் கையாளுதல் போன்ற எந்த ஒரு அம்சத்திலும் எவ்விதமான அனுபவங்களும் இல்லாத ஆட்சியாளர்களும், உயர் அதிகாரிகளும் இந்த நாட்டை எங்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்பதை நினைக்க பெரும் பயமாக இருக்கின்றது. மோடியின் மொடலில் இனக்கருவறுக்கும் திட்டத்தினை பிந்தியாவது அமல்படுத்தும் எண்ணத்தில் அமைதியாக மோடியின் அடாவடித்தனத்தைப் பார்த்து மௌனமாக இருக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், உண்மையைச் சொல்வதானால் எந்தவிதமான நன்மையை மக்களுக்கோ நாட்டுக்​ேகா செய்யமாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.