Header Ads



கனடா பிரதமரின் மனைவி, கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்ததாக அறிவிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பேர் குணமடைந்துவிட்டார்கள்.

கொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Gongrats and happy to heaar.

    ReplyDelete
  2. சிறந்த ஒரு மனிதர் அவர்.அவர் மனைவி குணமடைந்துவிட்டது மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  3. One of best western leader with a kind heart and good intention to help humanity, we are happy to see her recovered.. best wishes...

    ReplyDelete
  4. Dear sir. your are the great humans were all muslims like your and we all reminded your when Muslim during the prayers.

    ReplyDelete
  5. நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு நலவு கிடைக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.