Header Ads



மரண தண்டனை விதிக்கப்பட்ட சிப்பாய் சுனிலுக்கு பொது மன்னிப்பு

(எம்.மனோசித்ரா)

மிருசுவில் பிரதேசத்தில் சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மரண தண்டனை விதிக்கப்பட்ட  முன்னாள்  இராணுவ  சிப்பாய்  சுனில்  ரத்னாயக்க ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பினடிப்படையில்   விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.    இன்று வியாழக்கிழமை -26-  காலை   9. 30    மணியளவில்  வெலிக்கடை  சிறைச்சாலையிலிருந்து   விடுதலை செய்யப்பட்டள்ளார்.

மிருசுவில் பிரதேசத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவனொருவன் உள்ளிட்ட 8 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனில் ஜயரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு ஏனைய நான்கு சந்தேகநபர்களும் போதிய சாட்சிகள் இன்மையால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

4 comments:

  1. THIS HAS BEEN DONE TO FEEL THE PULSE AND REACTION FROM PUBLIC.NEXT IN LINE TO BE RELEASED IS NONE OTHER THAN MR.DUMINDA SILVA-JAYAWEEWA.

    ReplyDelete
  2. மாபெரும் குற்றத்தை செய்துள்ளார் இலங்கை ஜனாதிபதி,
    தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் நீதி கிடைக்கவே இல்லை, இது தான் இலங்கையின் நீதித்துறையா,

    ReplyDelete
  3. இதில் என்ன நியாயம் இருக்கின்றது என பொதுமக்களாகிய எமக்கு விளங்கவில்லை.

    ReplyDelete
  4. Gota is carrying out his election promises by releasing criminals from the jails while people are panicking with Corona.

    ReplyDelete

Powered by Blogger.