Header Ads



கொரோனா தொற்றினை அறிந்துக்கொள்ள, மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்


உலகம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் பலர் அதனை வெளிப்படுத்தாமல், அல்லது சிகிச்சைக்கு செல்லாமல் இருப்பது உலக நாடுகளிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டிருக்கும் இடர்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு பிரித்தானியாவில் புதிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்துக்கொள்ள மோப்ப நாய்களை பயிற்சியில் ஈடுபடுத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் சுகாதார மற்றும் மூலிகை மருத்துவ பாடசாலை மற்றும் டெர்ஹாம் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களுக்கு கொரோனா தொற்றாளர்களை கண்டறிய முடியுமா என்பது தொடர்பிலேயே இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதுடன் மோப்ப நாய்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், மலேரியா நோயாளர்களை இனங்காண்பதற்கு மோப்ப நாய்களை ஈடுபடுத்துவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.