Header Ads



கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆபத்து, சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம் - ஹரீஸ்

கடந்த காலங்களில் நாங்கள் சட்டபூர்வமற்ற பயங்கரவாத அமைப்புகளையே சந்தித்தோம். அவர்களை அழிக்ககூடியதாக இருந்தது. இப்போது அழிந்தும் விட்டார்கள். ஆனால் இப்போது நாங்கள் போராடப்போவது மக்களால் சட்டப்படி தெரிவுசெய்யப்பட்டு சர்வதேசம் அங்கீகரித்த அரசாங்கத்துடன். அவர்களுடன் போராடி நமது உரிமைகளை பெற வேண்டுமாக இருந்தால் பலமான அரசியல் சக்தியாக நாங்கள் மாற வேண்டும். என்னுடைய மார்க்கத்திற்க்கும், என்னுடைய முஸ்லிம் உம்மத்திற்க்கும் பிரச்சினைகள் வரும்போது அதை தட்டிக்கேட்கும் வல்லமை உள்ள மக்கள் சக்தி கொண்ட ஒரே கட்சி நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்று இரவு பொத்துவிலில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸித் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் சம்மேளன உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவாளர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அவர். தனது உரையில் மேலும்,

கடந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் எமது சமூகத்தை பாதுகாக்க எல்லோரும் ஒன்றிணையுங்கள் என அழைப்பு விடுத்தேன். அவ்வாறு ஒற்றுமைப்படுவதனுடாக அம்பாறை மாவட்டத்தில் நான்கும் தேசிய ரீதியாக 25 பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் பெற முடியும். இவர்களை ஒற்றுமைப்படுத்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவரிடமும் பேசியிருக்கிறோம். முஸ்லிம் காங்கிரசின் தலைமை எங்களை விட்டு பிரிந்துசென்ற முன்னாள் செயலளார் நாயகம் எம்.டி. ஹஸனலியை அழைத்து எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருக்கிறோம். இதுசம்பந்தமாக ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களிடம் பேசுங்கள் என செய்தி சொல்லியுள்ளார்.

சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் எமது சமூகத்தின் கப்பல் மூழ்கப்போகும் தருணத்திலும் தனது கட்சி, தனது ஆதரவாளன் என சிந்திப்பவன் தலைவனாக முடியாது. தைரியமாக முடிவெடுப்பவன் தான் தலைவன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆபத்து தெளிவாக தெரிகிறது. அதை நாம் இராஜதந்திரமாக அணுக வேண்டும். ஈஸ்டர் தாக்குதலின் போது முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வையும், முன்னாள் அமைச்சர் றிசாத்தையும் தீவிரவாதி என முத்திரை குத்தி போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்தது மற்றுமின்றி அவர்களின் பதவிகளையும் இராஜினாமா செய்யவேண்டும் என கோஷமெழுப்பியபோது சமூகத்தின் இருப்பை பாதுகாக்க  நாங்கள் துணைநின்று எங்களுடைய பதவிங்களை துறந்து சமூக ஒற்றுமையை வலியுறுத்தினோம். ஆனால் அப்போதைய  சூழ்நிலைகளிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரையும், முஸ்லிம் காங்கிரசின் எம்.பிக்களையும் நடுநிலையான அரசியல்வாதிகளாக சிங்கள சமூகம் ஏற்றுக்கொண்டது. இதுதான் சிங்கள சமூகம் எங்கள் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு.

கல்முனை துண்டாட கூட்டம் நடைபெற்ற போது கருணா, வியாழேந்திரன், ஸ்ரீயாணி, விமலவீர போன்ற எல்லோரும் ஒன்றிணைந்து கல்முனை மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் மட்டுமின்றி அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் உங்களுக்கு எதிராக நின்றபோது நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என வாதிட்டனர்.  நாங்கள் துணிந்து நின்று அந்த செயலக விவகாரம் தொடர்பிலான நியாயத்தை எடுத்து கூறிய  எங்களின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ஏற்றுக்கொண்டார்.

நாங்கள் மிதவாதமாக செயற்படுபவர்கள் என்பதனால் எங்களுடைய கோரிக்கைகளை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள். பொத்துவில் மண்ணின் பாதுகாப்பு என்பது முஸ்லிம் காங்கிரசின் கையிலையே இருக்கிறது. இது சிறுபிள்ளைகள் குஞ்சான் சோறு கட்டி விளையாடும் காலமில்லை. மண்மலையில் பிரச்சினை வந்தபோது பாதயாத்திரை வந்தவர்களால் இந்த மண்ணுக்கு ஆபத்து என்பதை அறிந்து பாதுகாப்பு தரப்புடன் பேசி பாதுகாப்பை பலப்படுத்தி  தன்னந்தனியாக நின்று போராடி பொத்துவில் தவிசாளர் வாஸித் வெற்றிபெற்றார். பொத்துவில் சந்தியில் சிலைகளை நிறுவி பொத்துவிலை பௌத்தநகரமாக காட்ட மேற்கொண்ட சதிகளை தனது அரிகாரத்தை கொண்டு தடுத்தவர் பொத்துவில் தவிசாளர் வாஸித். அப்போது றிசாத் பதியுதீனும், மக்கள் காங்கிரசும் களத்தில் வந்து மக்களுக்காக பேசவில்லை.

பொத்துவில் மக்களின் காணிப்பிரச்சினை எங்களுடைய தவறு அல்ல. முதுகெழும்பு இல்லாத கடந்த ஆட்சியின் காலத்தில் குறிப்பாக ரணிலின் தவறு. சிறிய விடயமாக இருந்த கல்வி வலய உருவாக்கத்தில் கூட சம்பந்தனின் அனுமதி பெறப்பட வேண்டும் எனும் நிலை இருந்தது. மறைந்த தலைவர் அஷ்ரபின் ஒசியத்தான ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது எனும் ஒசியத்தை (மரண வாக்குறுதி) நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் இருந்திருக்கிறோம். கடைசியாக ரணிலின் ஆட்சியில் கல்முனையை பறிகொடுக்க பார்த்தோம், காணிகளை பறிகொடுக்கப்பார்த்தோம், அந்த அரசில் நடந்தவற்றை தலைவர் ஹக்கீம் அவர்கள் பொத்துவிலுக்கு வரும்போது தெளிவாக உங்களுக்கு விளக்குவார்.  

பூகோள அரசியலில் பொத்துவில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க யார் பொருத்தமானவர் என்பதை இளம் தலைமுறையினர் மட்டுமன்றி இங்குள்ள பெரியோர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் என்ற அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நான் இதயசுத்தியாக கரிசனையுடன் கையாண்டு வருகிறேன். மக்களை ஏமாற்றாமல் அரசியல் செய்து வருகிறோம் பொத்துவில் மக்களின் பிரதிநிதியாக பொத்துவில் தவிசாளர் வாஸித் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும் என கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்

3 comments:

  1. படித்த,அரசியல் தெரிந்த ஒரு சட்டத்தரணி?
    அதாவுள்ளா பாணியில் கேட்கிறேன் இவ்வளவு நாளும் கோமாவிலா இருந்தீர்கள்?
    வெட்கம் கெட்டவர்களே!
    முடிந்தால் உங்களை எல்லாம் தவறாக வழிநடத்திய சாணக்கிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வாருங்கள் பார்க்கலாம்.
    அல்லது சமூகமா கட்சியா என்பதை சீர்தூக்கிப் பார்த்து கட்சியை வீட்டு வெளியே வரமுடியுமா?
    இடுப்பில் பலம் இல்லாது கிழக்கு முஸ்லிம்களை ஹக்கீம் என்ற அரசியல் விபச்சாரிக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையை தொடர்ந்து செய்வதையாவது நிறுத்த முடியுமா?
    எப்போதுமே ஏமாறும் பாமர பொத்துவில் மக்களிடம் உங்கள் பருப்பு இனி வேகாது.

    ReplyDelete
  2. Jaffna Muslim

    Where is my posts ?
    Don't be biased.

    ReplyDelete
  3. This racist is begging for a minister position
    He will never get it

    ReplyDelete

Powered by Blogger.