Header Ads



புத்தளம் மாவட்டம், முடக்கப்பட சாத்தியம் - சுகாதார அமைச்சர்


(எம்.எப்.எம்.பஸீர்)

சுய தனிமைப்படுத்தலூடான தொற்று நீக்கல் நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருந்து வந்தோர் தொடர்ந்து நிராகரிப்பார்களாயின் , கொரோனா  வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்கொள்ளும்  புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

 கொரோனா அல்லது கொவிட் 19 எனப்படும் வைரஸ் தொற்று பரவுவதை  தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறுனார்.

 ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நாம் இது குறித்து  தீவிரமாக கலந்துரையாடினோம். உண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் வந்த பலர் சுய  தனிமைபப்டுத்தலுடன் கூடிய தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படாது நடமாடி வருகின்றனர். 

உண்மையில் இது எமது நாட்டு மக்களின் ஒழுக்கம் சார் பிரச்சினை.  சுகாதார சேவைகள் அதிகாரிகள்,  அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அவர்கள் அதனை கணக்கில் கொள்ளாமல் செயற்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது. இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர்  புத்தளம் முழுவதும் உள்ளனர். 

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்கு வரத்து உள்ளிட்டவை முடக்கப்படலாம்.  அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம் என்றும் கூறினார்.

1 comment:

  1. Government should have taken measures at the airport from the begining..

    ReplyDelete

Powered by Blogger.