Header Ads



கொரோனா நோயாளி பற்றிய தவறான, தகவலால் மட்டக்களப்பில் பதற்ற நிலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தவறான தகவல் கசிந்ததனால் அங்கு இன்று மாலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சிலர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவரை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்ததன் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இளைஞர்களுடன் கலந்தாலோசித்ததுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாத்திரம்தான் இங்கு பரிசோதிக்கப்படுகின்றது எனவும் கொரோனா தொற்றுடைய நோயாளி எவரும் அனுமதிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. மட்டகளப்பு ஷரியா பல்கலைக்கழகமா?

    ReplyDelete

Powered by Blogger.