Header Ads



ஈரான் முழுவதும் கொரோனா பரவிவிட்டது - ஹசன் ரூஹானி


ஈரான் முழுவதும் கொரோனா பரவிவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், கொரோனா பரவுவதற்கு மத்தியிலும் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முடிந்த அளவு விரைவில் கொரோனாவில் இருந்து ஈரான் மீண்டு வரும் ரூஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.