March 06, 2020

மஹர பள்ளிவாசலுக்குள், புத்தர் சிலை எப்படி வந்தது...?

‘பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.

100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்­கி­வந்த பள்­ளி­வாசல் தற்­போது சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்டு, சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மத­வ­ழி­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­கி­றார்கள். ராகம பகு­தியில் வாழும் சுமார் 290 குடும்­பங்கள் இப்­பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்தி வந்­த­தாக பள்­ளி­வாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­விக்­கிறார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ பக் ஷ, பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ, நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷரப், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகி­யோ­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

4/21 தாக்­கு­தலின் பின்பு தடை

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலின் பின்பு சிறைச்­சாலை அதி­கா­ரி­களால், பள்­ளி­வாசல் முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டது. பாது­காப்பு கார­ணங்­களின் நிமித்தம் பள்­ளி­வாசல் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை நிர்­வாகம் தெரி­வித்­தது.

பாது­காப்பு கார­ணங்­களை முன்­வைத்து பள்­ளி­வாசல் தடை­செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் நிலைமை சீர­டைந்த பின்பு, அவ­ச­ர­கா­ல­சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு பள்­ளி­வாசல் மத கட­மை­க­ளுக்­காக திறந்து வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் அவ்­வாறு திறந்­து­வி­டப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் தடை உத்­த­ரவு அமு­லிலே இருந்­தது. இந்த கால எல்­லை­யிலே பள்­ளி­வாசல் புனர்­நிர்­மாணம் செய்து ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

ஆனால் பள்­ளி­வாசல் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­ட­மையை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக பள்­ளி­வாசல் நீண்­ட­கா­ல­மாக கைவி­டப்­பட்­டி­ருந்­த­தாலே ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­ட­தாக சிறைச்­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு ஓய்வு நேரங்­களைக் கழிக்க ஓய்வு அறை இல்­லாத குறையை தீர்ப ்­ப­தற்­காக மேற்­கொண்ட தீர்­மானம் என்றும் சிறைச்­சாலை அதி­காரி ஜகத் சந்­தன வீர­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லின்றி முஸ்­லிம்­க­ளுக்கு அசெ­ள­க­ரியம்

மஹர சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு முஸ்லிம்கள் பிர­வே­சிப்­ப­தற்கு தடை­வி­தித்­தனர். பாது­காப்பு கருதி முஸ்­லிம்­களை அங்கு அனு­ம­திக்க முடி­யா­தென்றும் கூறப்­பட்­டது. சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கமே இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­தி­ருப்­ப­தா­கவும் மஹர சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை ராகம பகு­தியைச் சேர்ந்த சுமார் 290 முஸ்லிம் குடும்­பங்கள் பயன்­ப­டுத்தி வந்­தன. நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக இப்­பள்­ளி­வா­சலில் நாளாந்த ஐவேளை தொழுகை, வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழு­கைகள், தராவிஹ் தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகை என்­பன நடை­பெற்று வந்­துள்­ளன.

பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்­டதன் கார­ண­மாக முஸ்­லிம்கள் பல மைல்­க­ளுக்­கப்பால் இருக்கும் வேறு பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் செல்லும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பள்­ளி­வா­சலில் நடை­பெற்று வந்த அஹ­தியா வகுப்­பு­களும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­ச­லுக்குள் பிர­வே­சிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளதால் பள்­ளி­வா­சலை துப்­பு­ரவு செய்­வ­தற்கோ, பள்­ளி­வா­சலில் இருக்கும் பொருட்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கோ இய­லாது இப்­ப­குதி மக்கள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

ஜனா­ஸாக்கள் இடம்­பெற்ற போது ஜனா­ஸாக்­களை சுமந்து செல்­வ­தற்­கான சந்தூக் மற்றும் ஜனா­ஸாவை குளிப்­பாட்­டு­வ­தற்­கான மேசை போன்­ற­வற்றை பள்­ளி­வா­ச­லி­ருந்து பெற்று பயன்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டதால் ஜனாஸா நல்­ல­டக்­கத்­திலும் அண்­மைக்­கா­ல­மாக இப்­ப­குதி மக்கள் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டார்கள்.

அண்­மையில் ஐந்து ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

இச்­சந்­தர்ப்­பத்தில் சந்தூக் மற்றும் ஜனாஸா குளிப்­பாட்டும் மேசை பெற்றுக் கொள்ள முடி­யாமற் போனதால் இரண்டு ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்­கத்­துக்­காக மாபோல மைய­வா­டிக்கே எடுத்துச் செல்­லப்­பட்­டன. பின்பு ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்­கத்­துக்­காக வேறு மைய­வா­டி­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­டக்­கூ­டாது.

மஹர மைய­வா­டி­யிலே நல்­ல­டக்கம் செய்ய வேண்­டு­மென மஹர பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­தது. இந்த மைய­வாடி மஹர ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மை­யிலே அமை­யப்­பெற்­றுள்­ளது.

இரண்டு ஜனா­ஸாக்கள் மஹர மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இதற்­கென சந்தூக் மற்றும் ஜனாஸாக்கள் குளிப்­பாட்டும் மேசை என்­பன மாபோலை பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தே எடுத்து வரப்­பட்டு ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்­டி­ருந்­ததால் ஜனாஸா தொழுகை ஜனாஸா வீட்­டி­லேயே நடத்­தப்­பட்­டது. இறு­தி­யாக இப்­ப­கு­தியில் நிகழ்த்த ஜனா­ஸாவின் தொழுகை மைய­வா­டி­யிலே நடாத்­தப்­பட்­டது.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு இவ்­வா­றான சவால்­க­ளையும் அசெ­ள­க­ரி­யங்­க­ளை­யுமே இப்­ப­குதி முஸ்­லிம்கள் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. 100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு நேர்ந்த கதியே இது. அர­சாங்கம், தேசிய ஒரு­மைப்­பாடு, இன நல்­லி­ணக்கம், மத உரி­மைகள், அனை­வ­ருக்கும் சம­மான நீதி என்­றெல்லாம் பட்­டி­ய­லிட்டு கவர்ச்­சி­யான உறு­தி­மொ­ழிகள் வழங்­கி­னாலும் கள­நி­லைமை இவ்­வாறே அமைந்­தி­ருக்­கி­றது. இந்­நி­லை­மை­களை அர­சியல் தலை­வர்கள், ஆட்­சி­யா­ளர்கள் அறி­யா­தி­ருக்­கி­றார்­களா?

இவற்­றுக்­கெ­தி­ராக அமைச்­ச­ர­வையில் குரல்­கொ­டுக்க முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் எவரும் இல்லை. முஸ்லிம் அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­டாமை ஓர் திட்­ட­மிட்ட செய­லா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே பதவி வகிக்­கிறார். அவர் தன்னைச் சூழ பல முஸ்லிம் விவ­கார ஆலோ­ச­கர்­க­ளாக பலரை இணைத்துக் கொண்­டுள்ளார். ஏன் அவர்கள் இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் வாய் மூடி மெள­னி­க­ளாக இருக்­கி­றார்கள் என்­பது புரி­ய­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களில் வாய் திறக்கக் கூடாது என்ற நிபந்­த­னையில் கீழ் அவர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­களா? இல்­லையேல் அவர்கள் வாய்­தி­றக்­கப்­ப­யப்­ப­டு­கி­றார்­களா? எனும் வினாக்­க­ளுக்கு அவர்கள் தான் சமூ­கத்­துக்குப் பதி­ல­ளிக்க வேண்டும்.Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

3 கருத்துரைகள்:

வாயிருந்தும் ஊமை
காதிருந்தும் செவிடு
கண்ணிருந்தும் குருடு

This is pohottu ruling .... only the the beginning.... what will happen if 2/3 wi in gen election?

Allah is enough for us.

A sabri where is your .....

It should be translated to sinhala too

Post a Comment