Header Ads



கொரோனோ தொற்றுக்குள்ளான முஸ்லிம்களை வேதனைப்படுத்துவதையும், அவதூறு பரப்புவதையும் நிறுத்துங்கள்

கொரோனோ வைரஸ் தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்ட அப்துல் ஹலீம் ஸாப்f (ஸாஹிப், தோழர், நண்பர் சகோதரர் , Brother) அவரைப் பற்றி FB, WhatsApp, Twitter போன்ற சமூக வலைத்தலங்களில் சுத்த சூfபிகள் பதிவிடும் உண்மைக்கு புறம்பான சில தகவல்களை வீட்டிலிருந்து நேற்று முதல் வாசித்தும், கேட்டுக் கொண்டும்தான் இருக்கின்றேன்.

புத்தளம் ஸாலிஹீன் மஹல்லாவைச் சேர்ந்த தரையோடு தலையை வலைத்து, கண் தெரியாத, காது கேட்காத நிலையில் பொல்லூன்றி தஹஜ்ஜத் முதல் அனைத்து தொழுகைகளுக்கும் ஸாலிஹீன் பள்ளியில் முன் ஸப்fபில் உட்கார்ந்திருக்கும் மூத்த ஸாலிஹான மனிதர் Tailor ரூபின் அவர்களும், அவர்களின் பிள்ளைகளும், அவர்களின் குழந்தைகளும் கல்வியிலும் மார்க்க விடயங்களிலும் இவ்வாறாக சீதேவியான குடும்பம். அந்த ரூபின் அவர்களின் மகன்களில் ஒருவர்தான் அப்துல் ஹலீம் காக்கா.

தானும், மனைவி மக்களுமாக ஒரு ஒழுக்கமான குடும்பமாக வாழக்கூடியவர்.

மேசன் Bபாசாக இருந்து பின்னர், Daido ஓட்டுநராக அன்றாடம் உழைத்து கஷ்டப்படும் ஒருவர்.

அதற்கு மத்தியிலும், ஜமாஅத்திலும் செல்பவர்.

புத்தளம் மர்க்கஸிலிருந்தும் மாதாந்தம் உள்நாட்டு, வெளிநாட்டு ஜமாஅத்துகள் செல்வது வழமை. அந்தவகையில் டிசம்பர் 26ஆம் திகதி தாய்லாந்துக்கு சென்ற ஜமாஅத்தில் ஹலீம் காக்காவும் போனார். பின்னர் பெப்ரவரி 22ஆம் திகதி இந்தோனிஸியா சென்றுள்ளனர். அங்கே, Airport ல் ச்செக் பண்ணித்தான் நாட்டுக்குள் அனுமதித்துள்ளார்கள். பின்பு மார்ச் 17ஆம் இலங்கை திரும்பி வரும்போது இந்தோனிஸியா Airport ல் ச்செக் பண்ணித்தான் நாட்டை விட்டும் அனுப்பியுள்ளார்கள். வந்தது ட்டச் (Tuch) Flight என்பதால் மலேசியாவில் விமானம் 6மணி நேரம் நின்று விட்டு, இலங்கை வந்துள்ளது. சிலர் சொல்கின்றனர் Airport ல் ஒன்னும் செய்ரதில்லை என்று. 

அரசாங்கம் எல்லாத்தையும் சரியாகத்தான் செய்கின்றாகள்

இங்கும் Airport ல் ச்செக் பண்ணி, ஸ்கேன் பண்ணி, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி அனைத்து தகவல்கயும் பெற்றுத்தான் இலங்கை நாட்டுக்குள் அனுமதிக்கின்றாகள். பின்னர், கொழும்பு மர்க்கஸ் மூடி இருப்பதால் நேராக வீடு வந்து சேர்ந்தார்கள். புத்தளம் வந்ததும், அரசாங்க சுகாதார அதிகாரிகள் வந்தவர்களின் வீடுகளுக்கு வந்து ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர். அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, வீடுகளில் தனிமைப்படுத்தி இருந்துள்ளார்கள். ஹலீம் காக்கா வீட்டுக்கு அதிகாரிகள் வருவதை எதிர் பார்த்திருந்து, ஓடி, ஒழிந்து களவாகத் திரியாமல், அவராகவே சுகாதார அதிகாரிளை சந்தித்து, தான் வெளிநாட்டு போய்வந்த விடயங்களைக் கூறவே, அவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கின்றார்கள். அதுவரைக்கும் அள்ளாஹ்வின் கிருபையால் எந்தவித வருத்தமும் இல்லை. அவருக்கு இருமல் மட்டுமே ஒரு வருத்தமாக இருந்துள்ளது. பிறகு, சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு தனது இருமலை தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் அவரை புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் அனுப்பி வைக்கப்பட்டார்.

மாஷா அள்ளாஹ்! இருமல் குறைந்து, தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் வேளையில் அவரின், உடம்பில் வைரஸ் தொற்றி இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர். Covid 19 வைரஸ் பற்றி

அரசாங்க சுகாதார வைத்திய அதிகாரிகள் தொடர்ந்தும் அவரைக் கண்கானித்து வருகின்றனர். 

இன்ஷா அள்ளாஹ்! பூரணமாக சுகம் பெற்று ஊர் வந்து சேர துஆச் செய்வோம்.

அவரோடு ஜமாஅத் சென்ற மற்றவர்கள் வீட்டில் சுகமாகத்தான் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஜமாஅத்தில் வெளிநாடு சென்று வந்தமையால், இன்னும் ஓரிரு நாட்கள் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார்கள். இச்சந்தர்ப்பத்தில், புத்தளம் நகரசபை, பாதுகாப்புப் பிரிவு, சுகாதாரப் பிரிவு, அவர்களுடைய கடமைகளை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

இதை விடுத்து, கேட்டதை, வாசித்ததை சரியாக விசாரிக்காமல் பொய்யான தகவல்களைப் பரப்புவது, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவது அள்ளாஹ்விடத்தில் பாரிய குற்றமாகும்.

உரியவர் மன்னிக்காதவரையில் அள்ளாஹ்வும் மன்னிக்கமாட்டான். இதற்கிடையில் ஹலீம் அவர்கள் ஏன் அங்கு போனார். இங்கு போனார். என விமர்சனங்கள். தொழப்போனாராம். ஜமாஅத்தாட்கள் தீவிர போக்கில் இப்படித்தானாம். பள்ளியை அவரா திறந்து தொழுதார்? புத்தளம் மர்க்கஸ் சொன்னதும் இழுத்து மூடியே விட்டார்களே. 

புத்தளம் பகா பள்ளியின் ஊழியர்கள் ஜனாஸா விடயங்களுக்கு வந்து போவார்கள். பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தும் சிலவேளைகளில் நடந்தது. நேற்று முதல் பள்ளி மூடப்படுகின்றது. நேற்று அஸருக்குச் சென்று, பள்ளிக்கு வெளியில் நின்ற சில வாலிபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்போது யாருக்கு சீரழிவு? இப்போது அவர்களை வெளியே எடுக்க படுகிறபாடு அள்ளாஹ்தான் அறிவான்.

இன்னும் சிலருக்கு ஹலீம் அவர்களின் படம் தேவையாம். போட்டு கேவலப்படுத்த வேண்டுமாம். அதனால் மற்றவர்கள் திருந்துவார்களாம். இதுவரை 115 பேர் இந்த வைரஸ் உடையவர்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அரசாங்கம் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளார்களா? அனுதாபப்பட்டு சிகிச்சையைத் தான் வழங்குகின்றனர். இன்று அவருக்கு வந்த சோதனை, நாளைக்கு நமக்கு, நமது குடும்பத்திற்கு, நமது சமூகத்திற்கு, முழு உலக மக்களுக்கும் வந்திரக்கூடாது என துஆக்களில் ஈடுபடுவோம். பாதிக்கப்பட்டவர் பாவியுமல்ல. வெளிநாட்டில் ழுஹர் தொழுவித்த இமாம், அஸருக்கு இந்நோயால் வபாத்தானார்.

நல்லவர்களுக்கும் சோதனை உண்டு. ஊரடங்கை மீறியதாலேயே இப்போது, ஊரில் முடக்கப்படுகின்றோம். 

ஹலீம் ஸாஹிப் ஊரில் நின்றவேளை, அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் மற்றும் அவரோடு பிரயாணம் சென்றோர் இவர்களுக்கு வைத்திய சிகிச்சை வழங்க புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் வைத்திய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோர் அவ்விடத்திற்கு செல்லுமாறும்,கேட்பதோடு அள்ளாஹ்வுக்காக இல்லாத விடயங்களை கூறுவதை தவிர்ப்போம். ஹலீம் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவோம். அவர்களின் குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வோம். அள்ளாஹ் நம்மனைவரையும் அவனது அருளால் பாதுகாப்பானாக! ஆமீன்!!!

- பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய துஆக் கேட்கும் இஸ்லாமிய சகோதரன் -

5 comments:

  1. மிக்க நன்றி சகோதரரே...?

    ReplyDelete
  2. Jazakamullah brother. To my knowledge what you have written is correct and true. It is unfavourable and unexpected incident that happened to Br. Haleem and I am afraid it is great testing for our believe - Emaan. Reward from Allah (swt) will certainly for people who listen to scholars and act as per their advises in this situation. Wording and behaviour of some people are more paining than anything else. May Allah (swt) forgive and guide us in straight way; Aameen.

    ReplyDelete
  3. A True Muslim Will Strongly belive in the KADR of Allah... and will not blame the past incident and affected people. But they will take past a leason to correct them only.

    Those who oppose the affected people,,, remember Till we are identified for covid-19, no one of us will know about it.. There is no rule that confirm that we will be safe.

    May Allah protect all of us from this virus and the virus in our heart that talks ill of others. Just rais your hand in making Dua to protect all..

    ReplyDelete
  4. This is not an adamant or intentional action, it's happening with other people in various part of the Island and around the world as well.

    at this moment, I would like to suggest one thing that, if medias can display some examples of quarantine centers, people will not be reluctant to appear and admit in those centers...

    ReplyDelete

Powered by Blogger.