March 08, 2020

துருக்கி விமான சேவை, இலங்கை இளைஞரிடம் மன்னிப்பு கோரியது

இறுதியாக நீதி கிடைத்தது;
துருக்கி விமான சேவை இந்த இளைஞரிடம் மன்னிப்பு கோரியது!
இலங்கை நபர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் பலவந்தமாக துருக்கியில் இருந்து எந்த காரணமுமின்றி வெளியேற்றப்பட்ட துர்பாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட அவர் பதில் சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரையும் நாடினார்.அதிக செலவுசெய்தும் எவ்வித விசாரணையோ, திருப்திநகரமான பதிலோ அவருக்கு கிடைக்கவில்லை.
இது துருக்கி அதிகாரிகளின் அசமந்தப்போக்கை வெளிப்படுத்துகிறது.
சில மாதங்களுக்கு முன் அவர் இது விடயமாக என்னை நாடினார்.
அதன் விளைவு!!!!!👇
தற்போது துருக்கி அதிகாரிகள் அவருக்கு திரும்ப செல்வதற்கான 6 பயணச்சீட்டுகளை வழங்கியுள்ளனர்..
Mr.Areeb எனப்படும் இந்த வியாபாரி 2019 மே மாதம் தன் மனைவி, பிள்ளை சகிதம் USA ற்கு Dubai ஊடாக பயணித்ததள்ளார்.
அவர்கள் பிள்ளையை துபாயில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டு விட்டு அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். பின்னர் நெதர்லாந்திலும துருக்கியிலும் சில தினங்களை கழித்துவிட்டு துபாய்க்கு சென்று பிள்ளையை கூட்டிக் கொண்டு மீண்டும் இலங்கை வரும் பயணத்தின் போது துருக்கி அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
துர்ப்பாக்கிய நிலை ஒன்றினால் இந்த மனிதர் Amstredam ஊடாக Dubai நோக்கி செல்லும் வழியில் துருக்கி விமான நிலையத்தில் தரித்து நிற்கும் படி வேண்டப்பட்டுள்ளர்.
பின்னர் ISTANBUL விமான நிலையத்திற்கு தரைமார்க்கமாக சுமார் 12 மணி நேரம் பயணம் செய்த பின்னர் Dubai நோக்கி செல்ல அனுமதிக்க பட்டுள்ளனர்.
அவர்கள் இது தொடர்பாக பலரிடம் முறையிட்டும் பலவேறு சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றும் துருக்கி அதிகாரிகள் எதையும் கவனத்திலெடுக்கவில்லை.இந்த நிலையில் எனது நண்பர் ஒருவர் மூலம் என்னை நாடி நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.
அவர் எதிர்ப்பார்புகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் என்னை நாடினார்.
நான் சர்வதேச ரீதியில் நடைபெறும் வலையமைப்புகள் தொடர்பாடல்கள் ஆகியவற்றை நன்கறிந்தவன் என்பதால் அவரிடமிருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டேன்.
பின்னர் அவரிடம், உங்களுக்கு துருக்கி அதிகாரிகளிடம் இருந்து விரைவில் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்று கூறினேன்.
ஒரு வார காலத்திற்குள் அவர் எதிர்கொண்ட சிரமத்திற்கு பிரதிபலனாக அந்த அழைப்பும் வந்தது.
அதில் துருக்கி அதிகாரிகள், அவர்களின் முறையற்ற நடத்தைக்கு முதலில் அவரிடம் மன்னிப்பு கோருவதாக கூறினர்.
எனினும் அவர்கள் மன்னிக்கவும் என்று கூறி கை கழுவுகிறார்கள் என்று நினைத்து அவர்களில் பதிலில் இவர் மகிழ்ச்சியடையவில்லை.
எவ்வாறேனும் அவர்கள் பதிலளித்துள்ளதால் இந்த விவகாரத்தின் விளைவை சற்று பொறுத்திருந்து பார்க்கும்படி நான் அவரிடம் சொன்னேன்.
இப்போது அது நிஜமாகி விட்டது.
அவர் துருக்கிய ஏர்லைன்ஸின் உள்ளூர்(இலங்கை) கிளையை சென்று பார்வையிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், அவர்கள் அவருடைய கோரிக்கைக்கு பதிலளித்ததுடன் அவருக்கு 6 துருக்கிக்கான விமான சீட்டுகளை வழங்குவதாகவும் துருக்கியில் வந்து தங்கி செல்லுமாறும் வேண்டப்பட்டனர்.
இது துருக்கிய விமான நிலையத்தில் அவர் எதிர்கொண்ட சங்கடமான நிலமைக்கு ஒரு பெரிய நிவாரணமாகும்.
கடைசியாக அவர் வெற்றி பெற்றார்.
முஹீத் ஜீரன்
சர்வதேச அரசியல் பரப்புரையாளர் மற்றும் மூலோபாயவாதி
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்.

1 கருத்துரைகள்:

சகோதரர் முஜாஹித் அவர்களின் பிரதிபலன் எதிர் பாராமல் செய்யும் இத்தகைய பணிகள் பாராட்டுக்கு உரியவை ! வாழ்த்துக்கள் ! அல்லாஹ் உங்களை பொருந்திகொள்வானாக ஆமீன் !

Post a Comment