Header Ads



வரிசையில் நிற்கவேண்டாம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்


(இராஜதுரை ஹஷான்)

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள்  எவ்வித  தட்டுப்பாடுமின்றி விநியோகிப்பதற்கு  தேவையான  அளவு  களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டதும் தேவையற்ற  விதத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில்  வரிசையில் காத்திருப்பது அவசியமற்றாகும் என கனிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

அவசர மற்றும்  நாளாந்த தேவைக்கு போதுமான அளவு எரிபொருட்கள் கூட்டுத்தாபனத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.  ஊரடங்கு  சட்டம்  நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் எரிபொருள் நிலையங்களில் பதற்றமடைந்து வரிசையில் காத்திருப்பது தேவையற்றதாகும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நாடு தழுவிய  ரீதியில் உள்ள 480  எரிபொருள்  நிரப்பு நிலையங்களில் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான வசதிகளும் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.  எரிபொருள் போக்குவரத்து மற்றும் விநியோகம் தொடர்பிலான தகவல்களை கனிய எண்ணெய்  கூட்டுத்தாபனத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

1 comment:

  1. No worry about petrol.petrol world market price fone down.but iur country still same price.so dont worry.govt will issue without any mistake.god bless our nation

    ReplyDelete

Powered by Blogger.