Header Ads



ரோமில் 900 தேவாலயங்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.

அத்தோடு ஞாயிறு ஆராதனைகளும் அங்கு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் கர்தினால் ஏஞ்சலோ டி டொனடிஸ் தேவாலயம் மற்றும் ரோமின் 900 கிறிஸ்தவ வோலயங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் சுமார் 15,113 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்ததை அடுத்து , ஞாயிறு ஆராதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.