Header Ads



சுவிட்சர்லாந்தில் ஒரே பாடசாலையில் 8 ஆசிரியர்கள், 44 சிறார்கள் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்


சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் ஒரே பாடசாலையில் 8 ஆசிரியர்கள் மற்றும் 44 சிறார்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

ஆர்காவ் மண்டலத்தின் Spreitenbach பகுதியிலேயே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறார்களுக்கான பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளது.

இங்குள்ள 31 வயது ஆசிரியர் ஒருவர் குடும்பத்தாருடன் இத்தாலியில் இருந்து விடுமுறை முடித்து திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த சிறார் பாடசாலையானது மூடப்பட்டதுடன், அங்குள்ள 44 சிறார்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 5 வயது சிறுவன் ரோட்ரிகோ கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமது பெற்றோருடன் குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது சிறுவன் ரோட்ரிகோவால் ஒப்புக்கொள்ள முடியவில்லை எனவும், ஏன் தம்மை பாடசாலைக்கும் அனுப்பாமல், குடியிருப்புக்கு வெளியேவும் அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதாக கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிப்பதாக, சிறுவனின் தந்தை ஜோஸ் தெரிவித்துள்ளார்.

ரோட்ரிகோ மட்டுமின்றி, அன்ண்டை வீட்டாருக்கும் இதே பிரச்னை. அவர்களது 5 வயது சிறுமி, ஏன் தம்மை விளையாட வெளியே அனுப்புவதில்லை என கேட்டு பெற்றோரை நச்சரித்து வருகிறாராம்.

மூன்று நாட்களில் சிறுமிக்கு பிறந்தநாள் வருவதாகவும், ஆனால் இந்த சூழலில் கொண்டாட்டம் ஏதுமின்றி பிறந்தநாளை அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

தங்கள் சிறார்கள் பயிலும் பாடசாலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் காரணம் அறிந்த பல பெற்றோரும், அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது பேரழிவு எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது, சிறார்கள் மட்டுமின்றி, மொத்த குடும்பமும் பணிக்கு செல்ல முடியாமலும், வெளியே செல்லாமலும் முடங்கிப் போயுள்ளனர்.

No comments

Powered by Blogger.