Header Ads



கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     
    அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    ஸஹீஹ் புகாரி : 5678.
    அத்தியாயம் : 76. மருத்துவம்

    ***

    காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்:

    எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள்.

    அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

    அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

    இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்.

    ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம்,
    'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள்.

    நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.

    ஸஹீஹ் புகாரி : 5687.
    அத்தியாயம் : 76. மருத்துவம்

    ReplyDelete

Powered by Blogger.